சர்ச்சை சாமியாரின் அனாதை இல்லத்திற்கு சீல்?
பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே 10 பேரின் பிணங்கள் புதைக்கப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள அமுதானந்த தவயோகி சாமியாரின்ஆசிரமத்திற்குள் நடத்தப்பட்டு வரும் அனாதை இல்லத்திற்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம்முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் தனது பெயரை சுவாமி அமுதானந்த தவயோகி என்று மாற்றிக் கொண்டுசோழவரம் கம்மார்பாளையம் பகுதியில், ராமகிருஷ்ண ஆத்மாலயம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.
கடந்த 21 ஆண்டுகளாக இந்த ஆசிரமம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் முதியோர் இல்லம், அனாதை இல்லம், சிறுவர்களுக்கானகாப்பகம் உள்ளிட்டவை உள்ளன. மொத்தம் 195 பேர் தங்கியுள்ளனர். வயதானவர்கள், சிறார்கள், இளம் பெண்கள், மன நிலை பாதிக்கப்பட்டோர்இவர்கள்.
இந்த ஆசிரமத்தில் 10 பேரின் உடல்கள் (அவர்களில் 4 பேர் பெண்கள்) யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டு விட்டதாக சமீபத்தில் சர்ச்சைஎழுந்தது. இதையடுத்து இந்த ஆசிரமத்தில் பொன்னேரி டி.ஆர்.ஓ. சங்கீதா, தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர், சாமியாரிடம்விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில், அங்கு சுகாதார நிலை படு மோசமாக இருப்பதும், ஆசிரம இல்லங்களில் தங்கியிருப்போர் சரிவர பராமரிக்கப்படாமல்இருந்ததும் தெரிய வந்தது.
மேலும் 10 பேர் புதைக்கப்பட்டது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. புதைக்கப்பட்டவர்களில்5 பேர் முதியோர்கள், 2 பேர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள். அனைவரும் பெண்கள்.
இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை சங்கீதா, மாவட்ட ஆட்சித் தலைவர் ரன்வீர் பிரசாத்திடம் தாக்கல் செய்துள்ளார். மேலும் தாசில்தார்உள்ளிட்ட அதிகாரிகளும் தங்களது அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து சங்கீதா கூறுகையில், ஆசிரமத்தில் சுகாதாரம் என்பதே இல்லை. முற்றிலும் சீர்கேடாக உள்ளது. மேலும் அங்கு நடத்தப்பட்டு வரும்அனாதை இல்லத்திற்கு அரசின் அனுமதி கிடையாது. அனுமதி இல்லாமல் யாரும் அனாதை இல்லத்தை நடத்த முடியாது. சமூக நலத்துறையின்அனுமதியை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
எனவே அந்த அனாதை இல்லத்தை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிடக் கூடும். அங்கு தங்கியிருக்கும் முதியோர்களும், ஆதரவற்ற சிறுவர்,சிறுமியரும் வேறு அனாதை இல்லத்துக்கு மாற்றப்படுவர். இதுதொடர்பான உத்தரவை ஆட்சித் தலைவர் பிறப்பிப்பார்.
ஆசிரமத்தில் தங்கியிருந்து நோய் தாக்குதலால் இறந்த 7 பெண்களளையும், யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், கிராமத்து வெட்டியானைக்கொண்டு புதைத்துள்ளனர்.
இறப்பு குறித்து பதிவும் செய்யவில்லை. இவர்களின் சாவில் சந்தேகம் இருப்பதாக யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை என்றார் சங்கீதா.
பயந்து ஓடிய மார்வாடி:இதற்கிடையே சாமியார் குறித்த பல பரபரப்புத் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. தற்போது அவர் 1008 நாள் காளி பூஜை நடத்தி வருகிறார்.நள்ளிரவு 12 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின்னர் தனியாக அமர்ந்து பூஜை செய்வாராம்.
ஒருமுறை பூஜையின்போது மார்வாடி ஒருவரும் உடன் இருந்துள்ளார். அப்போது சாமியார் திடீரென படு ஆவேசமாக எழுந்து நின்றுநடனமாடியபடி ஓம் காளி, மாகாளி, மாக சக்தியே என்று அலறியுள்ளார். அதைப் பார்த்ததும் மார்வாடி அரண்டு அங்கிருந்து ஓடி விட்டாராம்.
தனது தவ வலிமையைத் தாங்க முடியாமல்தான் அவர் ஓடி விட்டார் என்று கூறினாராம் சாமியார்.
டி.ஆர்.ஓ.விடம் கோபம்:இதற்கிடையே, டி.ஆர்.ஓ. சங்கீதா விசாரணை நடத்தியபோது வார்த்தைக்கு வார்த்தை முரண்பாடாக பேசியும், கோபமாக பேசியும்,ஆவேசப்பட்டும் பரபரப்பை ஏற்படுத்தினார் அமுதானந்த தவயோகி சாமி.
சாமியாருக்கும், சங்கீதாவுக்கும் இடையே நடந்த விசாரணை உரையாடல் விவரம்:
சங்கீதா: 10 பேரை புதைத்துள்ளீர்கள். அதை ஏன் பதிவு செய்யவில்லை?
சாமியார்: இறப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியாது.
சங்கீதா: எம்.ஏ. படித்துள்ளீர்கள், பத்திரிக்கையில் எல்லாம் வேலை செய்ததாக கூறியுள்ளீர்கள். இந்த சாதாரண விதி கூடவா தெரியாது?சாமியார்: பெருத்த மெளனமே பதில்.
சங்கீதா (சாமியாரின் காளி பூஜை அறையில் நின்றபடி: இரவு எத்தனை மணிக்குப் பூஜை செய்வீர்கள்? யாரெல்லாம் வருவார்கள்? இளம் பெண்கள்உடன் இருப்பார்களா? எதற்காக இந்த பூஜை?
சாமியார்: (ஆவேசமாக) உலகில் தீயச் செயல்கள் அதிகமாகி விட்டது. அதை ஒழிக்கத்தான் இந்த பூஜை. சுனாமி, தீவிபத்து பான்றவைகளை என்சக்தியால் உண்டாக்கி தீயவர்களை நான்தான் அழித்தேன்.
சங்கீதா: சுனாமியில் இறந்தவர்களை தீயவர்கள் என்கிறீர்களா, என்ன பேசுகிறீர்கள்?
சாமியார்: ஆமாம், செத்தவர்கள் அனைவரும் தீயவர்கள்தான்.
சங்கீதா (அருகில் இருந்த அதிகாரிகளிடம்) காளி பூஜை குறித்து விரிவாக விசாரணை நடத்துங்கள்.
பின்னர் அருகில் இருந்த அனாதை இல்லத்திற்கும், வளாகத்திலேயே உள்ள பள்ளிக்கும் சென்று விசாரணை நடத்தினார் சங்கீதா. முதியோர்இல்லத்தில் இருந்த சில முதியவர்களைச் சுற்றிலும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.
மனநலம் பாதித்தவர்களுக்கு ஏன் சிகிச்சை தரவில்லை என்று சங்கீதா கேட்டபோது சாமியார் பதில் ஏதும் சொல்லவில்லை. இளம் பெண்கள்தங்கியிருந்த அறையில் 3 பெண்கள் இருந்தனர். அவர்களிடம் சங்கீதா விசாரணை நடத்தினார். அவர்கள் வறுமை காரணமாக இங்குதள்ளப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அறையின் சுவரில் ஒரு துவாரம் இருப்பதைப் பார்த்த சங்கீதா, இந்த துவாரம் எதற்கு என்று சாமியாரிடம் கேட்க, அவர் ஆவேசமாகி,இதையெல்லாம் கேட்காதீர்கள். இது காளி சக்தியால் ஏற்பட்ட ஓட்டை என்று படு கூலாக கூறினார்.
சமையல் அறையில் 15 இளம்பெண்கள் பளிச் உடையில் இருப்பதைப் பார்த்த சங்கீதா, இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோது 11வதுவகுப்பு படிப்பதாக அவர்கள் கூறினர். எங்கே என்று கேட்டபோது ஆசிரம பள்ளியில்தான் என்றனர். ஆனால் அந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு வரைமட்டுமே படிக்க முடியும் என்பதால் அந்தப் பெண்கள் குறித்தும் விசாரணை நடத்த சங்கீதா உத்தரவிட்டார்.
அவர்களிடம் அதிகாரிகள் தனித் தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றனர். பின்னர் ஒரு அறைமூடப்பட்டிருப்பதைப் பார்த்த சங்கீதா அதைத் திறந்து பார்த்தார். அதில் ஒரு பெண்ணும், பாட்டியும்அடைக்கப்பட்டிருந்தனர்.
யார் இவர்கள் என்று கேட்டதற்கு மன நலம் பாதித்தவர்கள் என்றார் சாமியார். ஆனால் அந்த இளம்பெண் மிகத் தெளிவாகப் பேசினார்.கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு அந்தப் பெண் வீட்டை விட்டு வந்து விட்டார். ஆசிரமத்தில், பெண் சுவாமிஜிக்கு வேலை செய்வதாகஅவர் கூறினார்.
இதையடுத்து சாமியாரிடம் திரும்பிய சங்கீதா, ஒரு பெண் கணவருடன் சண்டை போட்டு விட்டு வந்தால் அவர்களை சமாதானப்படுத்தி சேர்த்துவைக்க மாட்டீர்களா, போலீஸில் சொல்லியிருக்க வேண்டும் அல்லவா என்றார்.
சாமியார் ஆவேசமாகி, அதெல்லாம் எனக்குத் தெரியாது. யார் வந்தாலும் நான் காளி சேவைக்காக ஏற்றுக் கொள்வேன் என்றார்.
பின்னர் ஆசிரமத்தில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டதற்கு முதலில் 250 பேர் என்றார் சாமியார். பின்னர் 195 என்றார். பெயர்,முகவரி குறித்த விவரம் கேட்டபோது தெரியாது என்றார். கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று சங்கீதா கண்டிப்பாக கூறினார். அதற்குஅவகாசம் தேவை என்றார் சாமியார். அதை சங்கீதா ஏற்றுக்கொண்டார்.
சாமியார் அமுதானந்தாவின் ஆசிரம் குழப்பத்தின் கூடாரமாக இருப்பதையே இந்த விசாரணை காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விரைவில் 10 பேரின் உடல்களையும் தோண்டி எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஆசிரமத்தில் மேலும் தீவிர விசாரணைநடத்தப்படவுள்ளது. அதன் பிறகே சாமியார் மற்றும் ஆசிரமத்தின் பின்னணியில் நிலவும் மர்ம முடிச்சு அவிழும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications