26ம் தேதி ரயில்வே; 28ல் பொது பட்ஜெட்
டெல்லி:2007-08ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் வருகிற 26ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 28ம் தேதி பொது பட்ஜெட்டை ப.சிதம்பரம்தாக்கல் செய்கிறார்.
இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வருகிற 23ம் தேதி கூடுகிறது. முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை நிகழ்த்துகிறார்.
அதன் பின்னர் 26ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து 28ம்தேதி பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சபையில் வைக்கிறார்.
27ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 21ம் தேதி வரைக்கு நடைபெறும்.பின்னர் மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை சபைக்கு விடுமுறை.
அதன் பின்னர் ஏப்ரல் 18ம் தேதி மீண்டும் சபை கூடி மே 22ம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தி முடிப்பதற்குவசதியாக வருகிற 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆலோசனைநடத்தவுள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடாாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.ஆர்.தாஸ் முன்ஷியிடம், இந்தக்கூட்டத் தொடரில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுமா என்று கேட்டபோது, ஏற்கனவேநிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுடன் புதிய மசோதாக்களும் எடுத்துக் கொள்ளப்படும் என பொதுவாக தெரிவித்தார்.
பரபரப்பான சூழலில் கூடும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அணல் பறக்கும் விவாதங்களுக்கும், வாக்குவாதங்களுக்கும், நிகழ்வுகளுக்கும்குறைவிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications