சென்னை தேர்தல்: மின்னணு ஒட்டுப்பதிவு கோரி வழக்கு
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கடசுப்ரமணியன் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்தஉள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்தது. 2001 டிசம்பரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் வன்முறை நடந்ததாக புகார்கள்வந்தன.
இதனால் மாநகராட்சித் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.
கடந்த அக்டோபர் 13ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் 2001ல் நடந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அப்படிச் செய்யவில்லை.
எனவே நடக்க இருக்கும் 100 வார்டுகளுக்கான மறு தேர்தலின்போது கட்டாயம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினேன்.
மும்பையில், மாநகராட்சித் தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் மூலம் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. எனவே சென்னையிலும்மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பரிசீலித்தது. பின்னர் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம்எத்தனை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளன, அதற்கான வாடகை எவ்வளவு, பயன்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்துபதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திங்கள்கிழமை இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சென்னை தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு நடக்காது, வாக்குச் சீட்டுஅடிப்படையில்தான் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன்திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications