ஈழம்: மத்திய அரசின் ஆதரவு தேவை-கருணாநிதி
சென்னை:மத்திய அரசின் ஆதரவுடன் ஈழத் தமிழர்களைக் காப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
ஈழத் தமிழர் பிரச்சினைக்கு மத்திய அரசின் ஆதரவோடும், துணையோடும் தீர்வு காண வேண்டும். இந்திய அரசின் ஆதரவோடு இலங்கைத்தமிழர்களைக் காப்போம்.
இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின்நடவடிக்கைக்காக காத்திருப்போம், இலங்கைத் தமிழர்களைக் காப்போம்.
தயாளு அம்மாளுக்கு ஆதரவு:
சாய்பாபா எனது வீட்டுக்கு வந்தபோது, தயாளு அம்மாள் பாபாவை கை கூப்பி வணங்கியதை விமர்சிக்கிறார்கள். அவர் வணங்கியதில்தவறில்லை. அது பகுத்தறிவுக்கு விரோதமான செயலும் இல்லை.
பக்தி முற்றி அவர் காலில் விழுந்து வணங்கவில்லையே! வயதில் முத்தவர்களை வணங்குவது என்பது நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு.வாழ்க்கையில் கலாச்சாரமும் தேவை, பகுத்தறிவும் தேவை.
தயாளு அம்மாளுக்கும், எனக்கும் 1948ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதற்கு முன்பே தயாளு அம்மாளின் குடும்பத்தினர் திராவிடர் கழகத்தில்தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அவரது பாட்டி ராஜாமணி அம்மாள் 1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். கைதாகி சிறையிலும் இருந்துள்ளார்.
இதுதவிர, சாய்பாபாவுடன் நான் ஒரே மேடையில் பங்கேற்றது, மாதா அமிர்தானந்தமயியுடன் நாகையில் நடந்த விழாவில் ஒரே மேடையில்கலந்து கொண்டது குறித்து விளக்கம் கேட்க விரும்புபவர்கள், அந்த நிகழ்ச்சிகளில் நான் பேசியவற்றைப் படித்துப் பார்த்து விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்தல் ஆணையர் விவகாரம்:
தேர்தல் ஆணையர் சந்திரசேகரனும், அமைச்சர் துரைமுருகனும் உறவினர்கள் என்பதால், சந்திரசேகரன் திமுகவுக்கு ஆதரவாக நடப்பார் என்றகுற்றச்சாட்டில் அர்த்தம் இல்லை. உண்மைக்கும், மரியாதைக்கும் விரோதமாக சந்திரசேகரன் நடக்க மாட்டார்.
இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். சென்னை மாநகராட்சித் தேர்தலில் 99 வார்டுகளுக்கான தேர்தலை ரத்து செய்து அங்கு மறுதேர்தல் நடத் த உத்தரவிட வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜாகலிபுல்லாவும் மிகவும் நெருங்கிய உறவினர்கள்.
நெருங்கிய உறவினராக இருந்தாலும், ராஜா கலிபுல்லாவின் வாதத்தை ஏற்று அரசுக்கு சாதகமாக அவர் தீர்ப்பளிக்கவில்லையே
2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சீட்டுக்களைப் பயன்படுத்தித்தான் நடந்தது. எந்த முறையைப் பயன்படுத்திதேர்தல் நடந்தால் என்ன, சீக்கிரம் தேர்தல் முடிந்து, மாநகராட்சி தனது ஜனநாயக செயல்பாடுகளை தொடங்கினால் எனக்கு சந்தோஷம் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications