நீள நாக்கை சுருக்கிய கேரள டாக்டர்கள்
கொச்சி:உலகிலேயே நீளமான மற்றும் அகலமான நாக்குடையவர் என்ற பெருமையுடன் இருந்து வந்த கேரளாவைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவரின்நாக்கை, அறுவைச் சிகிச்சை செய்து வழக்கமான சைசுக்கு மாற்றி அவருக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளனர் கேரள டாக்டர்கள்.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. கூலித் தொழிலாளியான இவருக்கு வயது 44. இவருக்கு வழக்கமாக இருப்பதை விடநீளமாக, அகலாக நாக்கு இருந்தது. அதாவது இவரது நாக்கின் நீளம் 13.5 செமீ. அகலம் 12 செமீ. இதனால் உதடுகளும் பெரியதாக இருந்தன.
இதன் காரணமாக இவரால் சரியாக சாப்பிட முடியவில்லை, பேச முடியவில்லை, வாயை மூட முடியவில்லை. சுரேஷ்பாபுவுக்கு 15 வயதுஇருந்தபோது, அவரது நாக்கு நீளமாக தொடங்கியது. அதைப் பரிசோதித்த டாக்டர்கள், இவருக்கு வழக்கத்தை விட ரத்த செல்கள் அதிகமாகஇருப்பதால் நாக்கு நீளமாக இருப்பதாக தெரிவித்தனர்.
அன்று முதல் இப்போது வரை நீளம் பிளஸ் அகலமான நாக்குடன் பெரும் அவதியுடன் வாழ்ந்து வந்தார் சுரேஷ்பாபு. உலகிலேயே மிக நீளமான,அகலமான நாக்கு என்ற கின்னஸ் சாதனையயும் இவரது நாக்கு படைத்தது.
இந்த நிலையில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினார் சுரேஷ்பாபு. அவரது பிரச்சினைக்கு தீர்வு காண அந்தமருத்துவமனை முடிவு செய்தது.
கடந்த 12ம் தேதி முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் பால் ஜோசப், காது, மூக்குத் தொண்டை மருத்துவ நிபுணர் வினோத் நாயர் ஆகியோரதுதலைமையிலான டாக்டர்கள் குழு அறுவைச் சிகிச்சை செய்தது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது.
இறுதியில், சுரேஷ்பாபுவின் நாக்கு, தொண்டை, கழுத்து ஆகியவற்றில் கூடுதலாக வளர்ந்திருந்த ரத்தக் குழாய்களை அறுவைச் சிகிச்சை மூலம்டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் சிரமமானது. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் கூட, அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்பட்டு விடும்என்பதால் டாக்டர்கள் மிகவும் கவனமாக அறுவைச் சிகிச்சையை செய்தனர்.
அறுவைச் சிகிச்சையின்போது குழாய்கள் மூலம் நாக்குக்கு வரும் ரத்தம், தற்காலிகமாக உடலின் பிற பகுதிகளுக்குத் திருப்பி விடப்பட்டது.அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னர் ரத்தம் மீண்டும் நாக்குக்குப் பாயும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டது.
மிகவும் நவீன வசதிகளுடன் கூடிய கருவிகளைக் கொண்டு இந்த நுணுக்கமான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இன்னும் 2 மாதங்களுக்கு சுரேஷ்பாபுவுக்கு பிசியோதெரபி கொடுக்கப்படும். நாக்கையும், உதடுகளையும் பலப்படுத்துவதற்காக இந்த பிசியோதெரப்பி தரப்படுகிறது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சுரேஷ் பாபுவின் நாக்கு வழக்கமான அளவுக்கு மாற்றப்பட்டு விட்டது.
நீண்ட நாக்கால் அவதிப்பட்டு வந்த சுரேஷ்பாபு இப்போது பெரும் நிம்மதியுடன் இருக்கிறார். அறுவைச் சிகிச்சை குறித்து அவர் கூறுகையில்,எனக்கு புது வாழ்க்கை (நாக்கு!) கிடைத்துள்ளது. இனிமேல் சமுதாயத்தை நம்பிக்கையுடன் நான் எதிர்கொள்வேன் என்றார்.
இந்த நீண்ட நாக்குப் பிரச்சினையால் சுரேஷ்பாபுவுக்கு கல்யாணம் ஆகவில்லையாம். பெண் கொடுக்க பலரும் மறுத்து விட்டதால் கல்யாணக்கனவை மூட்டை கட்டி வைத்து விட்டாராம் சுரேஷ்பாபு.
நீளமான நாக்கைக் கொண்டவர் என்ற பெருமையை முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் டெய்லர் என்பவர்தான் கொண்டிருந்தார். அவரதுநாக்கின் நீளம் 9.4 செமீ ஆகும். கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications