விதவையிடம் சில்மிஷம்: அரசு ஊழியருக்கு அடி!
சேலம்:கணவரை இழந்த பெண்களுக்கான கைம்பெண் உதவித் தொகையைப் பெற்றுத் தர வேண்டுமானால் உல்லாசமாக இருக்க வேண்டும் எனக் கூறிவற்புறுத்திய தாசில்தார் அலுவலக உதவியாளரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. 27 வயதான இவரது கணவர் மோகன் 2 ஆண்டுகளுக்கு முன்புஇறந்து விட்டார். 2 குழந்தைகளுடன் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் மாது.
குடும்பம் நடத்தி மிகவும் சிரமப்பட்டு வந்ததால் தமிழக அரசின் விதவைப் பெண்களுக்கான கைம்பெண் உதவித் தொகை பெற சேலம் தாசில்தார்அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார்.
தான் கொடுத்த விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக அங்குள்ள உதவியாளர் மதுரை என்பவரை (வயது55) அடிக்கடி வந்து சந்தித்துக் கேட்டுள்ளார்.
கடைசி முறை அவரை வந்து பார்த்தபோது, உதவித் தொகை பெற வேண்டுமானால் சிலவற்றுக்கு நீ ஒத்து வர வேண்டும். என்னுடனும், உயர்அதிகாரியுடனும் உல்லாசமாக இருக்க சம்மதித்தால், உடனடியாக உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். இல்லாவிட்டால் நீ கொடுத்தஆவணங்களை கிழித்துப் போட்டு விடுவேன், பிறகுஜென்மத்துக்கும் பெறவே முடியாது என்று மிரட்டியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ந்த மாது, தனது ஊருக்கு வந்து அங்குள்ளவர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கிராமத்தினர்,மதுரையை வளைத்துப் பிடிக்கத் திட்டமிட்டனர். இதையடுத்து மாதுவை மறுபடியும்மதுரையிடம் அனுப்பினர்.
அவரும் மதுரையை சென்று சந்தித்து, நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்னபடி ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குருவம்பட்டிகிராமத்துக்கு வர முடியாது. எனது வீட்டுக்கே வாருங்கள் என்று கூறி விட்டு வீடு திரும்பினார்.
சந்தோஷமாகிப் போன மதுரை, சொன்னபடி மாது வீட்டுக்கு வந்தார். உள்ளே நுழைந்த அவர் மாதுவின் கையைப் பிடித்து அருகே இழுத்தார்.இதையடுத்து மாது கூச்சல் போடவே, கிராமமே கூடி விட்டது.
மதுரையை வெளியே இழுத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை அம்மாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீஸார் மதுரையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications