கலாமை மீண்டும் சீண்டும் பால் தாக்கேரே
மும்பை:குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்து மீண்டும் காட்டமாக பேசி தனது வக்கிரத்தைக் காட்டியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசுகையில், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்துதனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தாக்கரேவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெ>வித்துள்ளன. தமிழகத் தலைவர்களான வைகோ,ராமதாஸ் உள்ளிட்டவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தனது பேச்சில் தப்பே இல்லை என்று தாக்கரே கூறியுள்ளார். மேலும், கலாமை மறுபடியும் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரஉள்ளாட்சித் தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் தாக்கரே பேசினார்.
அப்போது கலாம் குறித்து தான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டார். அவர் கூறுகையில், நான் என்ன தவறாக சொல்லி விட்டேன்?நான் ஒரு கார்ட்டூனிஸ்ட். ஒருவரின் தலைமுடியைப் பற்றி கருத்து சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.
நாங்களும் சேர்ந்துதான் கலாமை குடியரசுத் தலைவராக்கினோம். ஆனால் அந்தப் பதவிக்கு உரிய வகையில் அவர் செயல்படுகிறாரா என்றால்இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
முகம்மது அப்சலுக்கு அக்டோபர் மாதமே தூக்குத் தண்டனைக்கு தேதி குறிக்கப்பட்டு விட்டது. ஆனால் அது தொடர்பான கருணை மனு இன்னும்அப்துல் கலாமின் மேசையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதை நான் குறிப்பிட்டுச் சொன்னதில் எந்தத்தவறும் இல்லை என்று கூறினார் தாக்கரே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications