நெல்லை-காஞ்சியில் பஸ் விபத்துகள்-16 பேர் பலி
திருநெல்வேலி:நெல்லையில் அரசு பஸ் மீது தனியார் ஆம்னி பஸ் மோதியதில் 12 பேர் பலியாயினர்.
நகார்கோவிலில் இருந்து அரசு பஸ் ஒன்று நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதே போல சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிசென்ற தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. இரு பஸ்களும் நாங்குநேரி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 12 பேர்பலியாயினர்.
மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
காஞ்சியில்...
அதே போல காஞ்சிபுரம் அருகே நடந்த இன்னொரு சாலை விபத்தில் 4 பேர் பலியாயினர்.
சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும் எதிரே பெரிய எந்திரத்தை ஏற்றிக் கொண்டு வந்த கண்டெய்னர் லாரியும் வாலாஜாபாத்அருகே ஊத்துக்காடு கிராமத்தில் மோதிக் கொண்டன. லாரியின் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தை கவனிக்காமல் பஸ்ஸை ஓட்டியடிரைவர் அதன் மீது பக்கவாட்டில் மோதினார்.
இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications