தமிழக பஸ்கள நிறுத்தம், லாரிகளும் வரவில்லை
ஒசூர்:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பால் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் கர்நாடகத்துக்குள் இன்று தமிழக லாரிகள் நுழையவில்லை.அவை அனைத்தும் ஒசூருக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.
அதே போல பெங்களூரையொட்டிய தமிழக பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பல தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. மிகக் குறைவானபஸ்களே இயங்கின.
அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து 8 மணிக்கு மேல் அரசு பஸ் ஏதும் பெங்களூருக்கோ, மைசூருக்கோ வரவில்லை. பெங்களூர் வந்த பஸ்கள்ஒசூரோடு நிறுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் சனி, ஞாயிறையொட்டி தமிழகத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதே போல தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கிளம்பிய லாரிகள் ஒசூரில் நின்றிருப்பதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போது ஒசூருக்கு முன்பாகவே லாரிகள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவாஜி நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதல் பெங்களூரில் எங்கு திரும்பினாலும் தீர்ப்பு வந்தாச்சா.. தீர்ப்பு வந்தாச்சா என்ற பேச்சாகவே இருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications