ரப்பர் அரிசி போடும் திமுக அரசு: ஜெ.
சென்னை:ரப்பர் போல இருக்கும், சாப்பிடவே முடியாத, நாற்றம் பிடித்த அரிசியை கிலோ 2 ரூபாய் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு திமுக அரசு வழங்கிவருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நியாய விலைக் கடைகள் மூலம் திமுக அரசு வழங்கும் கிலோ 2 ரூபாய் அரிசித் திட்டம் ஏழை மக்களுக்கு பலன் அளிப்பதற்குப் பதில் பெரும்சிரமத்தையே கொடுத்து வருகிறது.
இந்த அரிசியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. புழு நெளியும் அரிசி, துர்நாற்றம் பிடித்த அரிசி, பழுப்பு நிறத்தில் உள்ள அரிசி, வண்டுமொய்க்கும் அரிசி என பல ரகங்களில் இந்த அரிசி வழங்கப்படுகிறது.
ரப்பர் போல இந்த அரிசி கடினமாக இருப்பதால் சாப்பிடவே முடியாமல், வாயில் போட்டு மெல்ல முடியாமல், மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்த அரிசியிலிருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்க வேண்டுமானால், மீன் குழம்பு வைத்து சாப்பிட்டால்தான் ஓரளவுக்குப் போகிறது. இதனால்தினசரி மீன் குழம்பு வைத்து சாப்பிட ஏழைகளால் முடியுமா?
இந்த அரிசியை ஆடு, மாடு, கோழிகளுக்குத் தீவணமாக கொடுத்தால் அவை சாப்பிட மறுக்கின்றன. தெரியாமல் சாப்பிட்டு விட்ட சிலகால்நடைகள் உயிரிழந்து போயுள்ளன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள, கெட்டுப் போன ரேஷன் அரிசியை தி.கவினரே ஏலத்தில் எடுத்துஅவற்றை மீண்டும் வாணிபக் கழகத்திற்கே அதிக விலைக்கு விற்கின்றனர். இதுதவிர வெளிமாநிலங்களுக்கும் கடத்திச் சென்று அதிக விலைக்குவிற்கின்றனர்.
2 ரூபாய் அரிசி தரமாக இல்லை என்று நான் மட்டும் குற்றம் சாட்டவில்லை. திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியே இந்தப் புகாரைகூறியுள்ளது.
ரேஷன் அரிசி கடத்துவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று இந்த அரசு கூறியது. ஆனால் அது என்னவாயிற்று? வெறும்கண்துடைப்பு அறிவிப்பு என்பது தெளிவாகியுள்ளது.
மக்கள் விரைவில் இந்த தீய சக்திகளை விரட்டியடிப்பார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications