மாநகராட்சி வழக்கு: 3வது நீதிபதி விசாரணை
சென்னை:சென்னை மாநகராட்சி தேர்தல் வன்முறை தொடர்பான வழக்கு இன்று 3வது நீதிபதி பி.கே.மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்முரண்பாடான தீர்ப்பைத் தந்தது. இதையடுத்து 3 வது நீதிபதியை, தலைமை நீதிபதி ஏ.பி.ஷா நியமித்தார்.
3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.கே.மிஸ்ரா முன்னிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிஇப்ராகிம் கலிபுல்லாவால் மறு தேர்தலுக்கு உத்தரவிடப்பட்ட 99 வார்டுகளில் ஒன்றான 53வது வார்டு கவுன்சிலரான பகுஜன் சமாஜ் கட்சியின்ஆம்ஸ்டிராங் (இவர் திமுக கூட்டணியோடு சேர்ந்து ராஜினாமா செய்யவில்லை) ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
தனது மனுவில், எனது வார்டில் தேர்தலின்போது வன்முறை நடக்கவில்லை. எனது கருத்தைக் கேட்காமல் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டதுசரியல்ல. எனவே என்னையும் இந்த வழக்கில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு நீதிபதி மிஸ்ரா அனுமதி அளித்தார். பின்னர் அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிமிஸ்ரா, இந்த வழக்கில் புதிதாக ஒரு தீர்ப்பை என்னால் கூற முடியாது. ஏற்கனவே 2 நீதிபதிகளும் வழங்கியுள்ள தீர்ப்புகளில் ஒன்றைத்தான்ஆதரித்து தீர்ப்பு வழங்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications