தமிழகத்திற்கு ரூ. 14,000 கோடி திட்ட ஒதுக்கீடு
டெல்லி:தமிழகத்திற்கு 2007-08ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடாக ரூ. 14,000 கோடியை ஒதுக்க திட்டக் கமிஷன்ஒப்புதல் அளித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 1,500 கோடி அதிகமாகும்.
திட்டக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று டெல்லி சென்றார்.
இன்று காலை அவரை தமிழ்நாடு இல்லத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார். மரியாதைநிமித்தமாக முதல்வரை சந்தித்ததாக அவர் தெரிவித்தார். பின்னர் திட்டக் கமிஷன் அலுவலகம் உள்ள யோஜனாபவனுக்கு கருணாநிதி சென்றார். அங்கு திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியாவை அவர்சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்திற்கான திட்ட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில்நிதியமைச்சர் க.அன்பழகன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
பின்னர் அலுவாலியாவும், கருணாநிதியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தமிழகத்திற்குதிட்ட ஒதுக்கீடாக ரூ. 14,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அலுவாலியா தெரிவித்தார்.
பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது கோரிக்கையை ஏற்று 14,000 கோடியைஅனுமதித்த திட்டக் கமிஷன் துணைத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இதுவரவேற்புக்குரியது, மகிழத்தக்கது என்றார்.
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ. 12,500 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 1,500 கோடிஅனுமதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் கருணாநிதி இன்று சந்தித்துப் பேசுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications