நிரூபிக்க ரெடியா? ஜெயாவுக்கு அமைச்சர் சவால்
சென்னை:ரேஷன் கடைகளில் புழுத்த அரிசியைப் போடுவதாகவும், நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் கெட்டுப் போன அரிசி ஏலத்தில் விடப்படுவதாககூறும் ஜெயலலிதா அதை நிரூபிக்கத் தயாரா என்று உணவு அமைச்சர் ஏ.வ.வேலு சவால் விட்டுள்ளார்.
இதுதொடர்பாக வேலு வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை விட எந்தப் பிரச்சினையும் கிடைக்கவில்லை. அதனால்தான் பொது விநியோகத் திட்டத்தின் கீழ்வழங்கப்படும் அரிசியைப் பற்றி பொய்யான தகவலைக் கொண்டு அறிக்கை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
ஆனால் அவர் சொன்ன எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை. முதல்வர் பதவியேற்ற பின்னர் கருணாநிதி கையெழுத்திட்ட முதல் திட்டம்கிலோ அரிசி 2 ரூபாய்குக்குத் திட்டத்தில்தான்.
இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் 9 மாவட்டங்களில் சுற்றுப்பயணம்செய்தபோது வழிநெடுக காத்திருந்து மக்கள் -முதல்வருக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
ரேஷன் அரிசி தரமாக கிடைப்பதாகவும், நல்ல அரிசியே கிடைப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சாப்பாட்டு குறித்து கவலையேஇல்லாத நிலையை ஏற்படுத்தியதற்காக முதல்வரை அவர்கள் வாயார வாழ்த்தினர்.
ஆனால் இந்தத் திட்டம் வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே வேண்டும் என்றேஇத்திட்டத்தின் மீது பழி போடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் ஜெயலலிதா.
ஆடு மாடுகள் இதைச் சாப்பிட்டு இறந்து விடுவதாக கூறுகிறார். இதை அவர் வேண்டும் என்றே திரும்பத் திரும்பக் கூறுவதில் கொஞ்சமாவதுஉண்மை இருக்கிறதா என்பதை அந்த அரிசியை வாங்கிச் சாப்பிடும் தமிழ்நாட்டு மக்கள்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நுகர்பொருள் வாணிப் கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அரிசி, மழை, வெயிலால் கெட்டுப் போய் விடுவதாகவும், அவற்றை திமுகவினர் ஏலத்தில்எடுத்து மீண்டும் வாணிபக் கழகத்திற்கே கொடுப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு ஒரே ஒரு உதாரணத்தை, எந்த ஊரில், எங்கே, எப்படி இந்த முறைகேடு நடக்கிறது என்பதையும், அதற்கான ஆதாரம் என்னஎன்பதையும், சொல்லத் தயாராக இருக்கிறாரா? இதை நான் சவாலாகவே கேட்கிறேன் என்று கூறியுள்ளார் வேலு.












Click it and Unblock the Notifications