3 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை
தென்காசி:தொடர்ந்து பெண் குழந்தைகளே பிறந்து வந்ததால் வாழ்க்கையில் வெறுப்புற்ற நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு பெண், 3பெண் குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலக்கடையநல்லூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி விவசாயி. இவரது மனைவி பாக்கியம் (28). இவர்களுக்கு கார்த்திகா (6), கவுரி (4), ஒன்றரை மாதகுழந்தை ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தன.
மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், வேதனையடைந்த பாக்கியம், இவர்களை எப்படி வளர்த்து ஆளாக்குவது என புலம்பியபடிஇருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அவர் கொடிக்குறிச்சியில் உள்ள தனது தங்கை மாலா வீட் டிற்கு சென்றுள்ளார். அங்கே இருந்த கிணற்றுக்குச் சென்றபாக்கியம், தனது 3 குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.
பின்னர் அருகேயுள்ள பூவரசம் மரத்தின் கிளையில் தனது சேலையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் பாக்கியத்தின் பிணத்தையும், கிணற்றில் மிதந்த 3 குழந்தைகளின் பிணங்களையும் பார்த்துபோலிஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
அச்சன்புதூர் போலீசார் விரைந்து வந்து பாக்கியம் மற்றும் குழந்தைகள் உடலை மீட்டனர். 4 உடல்களும் தென்காசி அரசு மருத்துவமனைக்குபிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications