நீதிபதிகள்: கருணாநிதி, வீராசாமிக்கு கண்டனம்
சென்னை:உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துப் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்குமதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதித்துறையுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துள்ளனர் கருணாநிதியும், ஆற்காடுவீராசாமியும். சட்டத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நீதிபதிகளை விமர்சித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.திஇது மிகவும் மோசமான ஒரு முன்னுதாரணம் ஆகும். நீதித்துறையுடன் மோதுவது அரசுக்கு நல்லதல்ல. தங்களது தவறுகளை மறைக்க இவ்வாறுபேசியுள்ளனர்.
நாடு சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை ஏற்படாத அபாயம் தமிழ்நாட்டில் ஜனநாயகத்திற்கும், சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டுக்கும்ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியல் நடக்கும் தவறுகளை யார் சுட்டிக் காட்டினாலும் அவர்களை அச்சுறுத்தி மிரட்டுவது வாடிக்கையாகி விட்டது.
முதல்வரும், ஆற்காடு வீராசாமியும், நீதிபதிகளை மிரட்டும் தொணியில் எச்சரித்துள்ளனர். முதல்வர் முன்னிலையிலேயே அமைச்சர் தலைமைநீதிபதியை விமர்சித்துப் பேசியுள்ளார். மிரட்டியுள்ளார்.
மாநகராட்சி தேர்தல் வன்முறை குறித்த வழக்கை விசா>த்த நீதிபதி தந்த தீர்ப்பையும் விமர்சித்துள்ளார். நீதிமன்றங்களை எதிர்த்துப் போராடுவோம்என்று மிரட்டியுள்ளார்.
இங்கு பேசி மிரட்டியதைப் போல தமிழ்நாடு எங்கும் நீதிபதிகளுக்கு எதிராக எச்சரிக்கைக் குரல் எழ வேண்டும் என்று ஏவி விட்டுள்ளனர்.வீட்டிற்குள் உணவுப் பொருட்களையும், தானியங்களையும் திருடித் திண்ணும் எலிகள், தங்களின் திருட்டை ஒழிக்க தங்கள் மீது பாயும் வீட்டுக்காவல் பூனையின் நடமாட்டத்தை முன்கூட்டியே அறிந்து தப்பித்துக் கொள்ளவே, பூனையின் கழுத்தில் மணி கட்ட முயற்சித்ததாம்.
இதைத்தான் பூனைக்கு மணி கட்டுவது என்று குறிப்பிடும் பேச்சு வழக்கத்தில் வந்தது. ஆற்காடு வீராசாமியின் பேச்சின் மூலம் அவர்களின்உள்நோக்கம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது.
ஆட்சியை யாரும் விமர்சிக்கக் கூடாது. அரசின் தவறுகளை நீதிமன்றங்கள் சுட்டிக் காட்டக் கூடாது என்றுதான் அச்சுறுத்தியுள்ளனர்.
முதல்வரும், ஆற்காடு வீராசாமியும் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தின் ஜனநாயகத்திற்கு ஒட்டுமொத்தமாகவேட்டு வைக்கிற அபாயகரமான போக்கை உணர்ந்து, அதனை எதிர்க்கவும், தடுக்கவும் ஆன கடமையை செய்ய தமிழக மக்களும் ஜனநாயகசக்திகளும் ஆர்த்தெழ வேண்டம் என்று கூறியுள்ளார் வைகோ.
விஜயகாந்த்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த வன்முறை நாடறிந்த ஒன்று. உண்மையைஉணர்த்த நீதிபதிகள் தங்களுக்குக் கிடைத்த சான்றுகளை கொண்டு தீர்ப்பு கூறியுள்ளனர்.
இதை அமைச்சர் ஆற்காடு வீராசாமி முதல்வர் முன் விமர்சித்துப் பேசியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. அமைச்சர்கள் பத்திரிகைகளில்அறிக்கைகள் தரலாம், பேட்டிகள் மூலம் பேசலாம். ஆனால் நீதிபதிகள் எந்த விளம்பர சாதனத்தையும் நாட முடியாது.
நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் நமக்குப் பிடிக்காமல் போகலாம், பிடிக்காமல் போகலாம். ஆனால் அதற்காக நீதிபதிகளைத் தரக்குறைவாகவிமர்சனம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
சு.சுவாமி:
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதித்துறைக்கு எதிரான கருத்துக்கு பகிரங்கமாக கருணாநிதியும்,ஆற்காடு வீராசாமியும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நான் கேஸ் போடுவேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தை கட்டப் பஞ்சாயத்து என்று கூறியுள்ளனர். இதன் மூலம், நீதிமன்றத்தை அவமதித்து விட்டனர். இதற்காக அவர்கள்இருவரும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
கருணாநிதி மன்னிப்பு கேட்க மறுத்தால், மத்திய அரசு அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி திமுக அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications