தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர் வழங்க நடுவர் மன்றம் உத்தரவு
டெல்லி:தமிழகத்துக்கு காவிரியில் 419 டிஎம்சி தண்ணீர் வழங்க காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் 192 டிஎம்சி நீரை தமிழகத்துக்குகர்நாடகம் திறந்துவிட வேண்டும்.
தமிழகம் தனக்கு 562 டி.எம்.சி வழங்கப்பட வேண்டும் என கோரியிருந்தது. இதையடுத்து தமிழகத்துக்கு எவ்வளவு நீர் வழங்கலாம் என ஆய்வுசெய்ய நடுவர் மன்றம் நிபுணர் குழுவை நியமித்தது. அந்தக் குழு குழு 395 டிஎம்சியை வழங்கலாம் என பரிந்துரைத்திருந்தது.
ஆனால், அதைவிட அதிகமாகவே, தமிழகத்துக்கு ஆண்டுக்கு 419 டி.எம்.சி. நீரை வழங்க நீதிபதி என்.பி.சிங் தலைமையிலான நடுவர் மன்றம்உத்தரவிட்டுள்ளது.
இந்த 419 டிஎம்சி நீரில் 192 டிஎம்சி நீரைத் தான் கர்நாடகம் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டி வரும். மிச்சமுள்ள நீர் தமிழகத்துக்குள் காவிரிநீர்ப் பிடிப்பு பகுதிகளில் (மழை, துணை ஆறுகள் மூலம் காவிரிக்கு வரும் நீர்) கிடைக்கும் நீராகும்.
காவிரியிலிருந்து கர்நாடகம் 270 டிஎம்சி நீரை எடுத்துக் கொள்ளலாம் எனவும் நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகம் தனக்கு 465 டிஎம்சிநீரைக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல கேரளத்துக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும், 10 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆற்றிலேயேவிட்டு வைக்க வேண்டும் என்றும் நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் ஓராண்டுக்கு 740 டிஎம்சி நீர் ஓடும் என்பதை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பை நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. ஆனால், வறட்சிஏற்படும் ஆண்டுகளில் இந்த அளவுக்கு நீர் இருப்பதில்லை. அப்போது 4 மாநிலங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பங்கில் இருந்து சரி சமமாகநீரைக் குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.
கர்நாடகம் திறந்துவிடும் 192 டி.எம்.சி. நீர் கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு அணையில் அளவிடப்படும்.
நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பு 1892 மற்றும் 1924ம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் மாகாண அரசுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை செல்லாததாக்கியுள்ளது. இனி வரும் காலங்களில் நீர் பிரச்சனையில் இந்த தீர்ப்பை வைத்தே இந்தவிவகாரம் அணுகப்படும்.
மத்திய அரசு இந்த உத்தரவை கெஜெட்டில் வெளியிட்ட நாளில் இருந்து இந்தத் தீர்ப்பு அமலுக்கு வந்துவிடும். இந்தத் தீர்ப்பு 1,000 பக்கங்கள்கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
விபி சிங் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட இந்த நடுவர் மன்றம் 17 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.1991ம் ஆண்டு இந்த மன்றம் வெளியிட்ட இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீரை வழங்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துகர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடந்தது.
இப்போது இறுதித் தீர்ப்பும் தமிழகத்துக்கு சாதமாகவே வந்துள்ளதால் கர்நாடகத்தில் தமிழர்களிடையே பெரும் அச்சமும் பீதியும் நிலவுகிறது.
தமிழகம், கர்நாடகத்தில் 80 லட்சம் விவசாயிகளும், 2.5 கோடி மக்களும் காவிரி ஆற்று நீரையே விவசாயத்துக்கும் குடிநீருக்கும் சார்ந்துள்ளனர்.தமிழகத்தில் காவிர் டெல்டா தான் மாநிலத்தின் உணவுத் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது.
கர்நாடகத்தில் தல காவிரியில் உருவாகும் இந்த ஆறு தமிழகத்தில் பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது.
காவிரி நீர் விவகாரகம் உலகின் மிக நீண்ட வழக்கு-விவகாரங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 17 ஆண்டுகளில் 560 முறை இந்தவழக்கை விசாரித்துள்ளது நடுவர் மன்றம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications