தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமில்லை: 205 டிஎம்சி 197 ஆனது-இறுதியில் மிஞ்சுவது 180 டிஎம்சியே!
தஞ்சாவூர்:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தங்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டதாக காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 419 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருப்பதாகமுதலில் வந்த தகவல் டெல்டா பகுதி விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் உள்ளிட்ட பாசனப் பகுதி மாவட்டங்களில் விவசாயிகள் தீர்ப்பைவரவேற்று பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
ஆனால் தீர்ப்பின் விவரம் முழுமையாக தெரிய வந்தபோது அவர்களின் மகிழ்ச்சி காணாமல் போய் விட்டது.தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்று அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர், பெரும் ஏமாற்றம்அடைந்துள்ளனர்.
தீர்ப்பு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் வெளியிட்டுள்ளஅறிக்கையில், இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு ஏற்புடையதல்ல. தீர்ப்பின் மீதுள்ள முரண்பாடுகளைசம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஜனநாயக முறைப்படி தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையை தகுந்த முறையில் தீர்த்து வைக்க மத்திய அரசுக்கு கூடுதல் பொறுப்பும், கடமையும்உள்ளது. எந்தவித அசம்பாவிதங்களுக்கும் இடம் அளிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
காவிரி காப்புக் கழக அமைப்பாளர் குப்புசாமி கூறுகையில், ஆண்டுக்கு 419 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்குஎன்று கூறப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் பெய்யும் 222 டிஎம்சி மழை நீரையும், பவானி மற்றும் நொய்யல் ஆகியதமிழக ஆறுகள் மூலம் காவிரிக்கு வரும் நீரையும் சேர்த்துத்தான் 419 டிஎம்சி என்கின்றனர்.
கர்நாடகம் இனி 205க்குப் பதிலாக 197 டிஎம்சி நீரை திறந்துவிட்டால் போதும். அதிலும் புதுவைக்கு 7 டிஎம்சிபோக தமிழகத்துக்கு மிஞ்சுவது வெறும் 190 டிஎம்சி தான். அதிலும் 10 டிஎம்சியை ற்றுச் சூழல் பாதுகாப்புக்குகொடுக்க வேண்டும். கடைசியில் எஞ்சுவது 180 டிஎம்சிதான்.
மேம்போக்காக பார்த்தால் இது தமிழகத்திற்கு ஆதரவான தீர்ப்பு போலத் தெரியும். ஆனால் ஆராய்ந்துபார்த்தால், தமிழகத்திற்கு பெரும் பின்னடைவான தீர்ப்பு என்பது புரியும்.
இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்குஉத்தரவிடப்பட்டிருந்தது. இப்போது அது 197 டிஎம்சியாக குறைந்துவிட்டது என்றார் அவர்.
தமிழ்நாடு பாரதீய கிஷான் சங்க பொதுச் செயலாளர் அய்யாக்கண்ணு கூறுகையில், காவிரி டெல்டாவிவசாயிகளுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் அவர்கள் பெரிதும்பாதிக்கப்படுவார்கள். டெல்டா பகுதிகள் வறண்ட பூமியாக மாறப் போகின்றன.
எனவே கர்நாடகத்திடமிருநந்து 419 டிஎம்சி தண்ணீரையும் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் இந்தத் தீர்ப்பு பெரும் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.மிகவும் அதிருப்தியுடன் உள்ளனர். நடுவர் மன்றத்தை தமிழக அரசு அணுகி இந்தத் தீர்ப்பை மறு ஆய்வுக்குஉட்படுத்த அவர்கள் கோரியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications