கஞ்சா ராணிகள் கிருஷ்ணவேணி, சித்ரா கைது
சென்னை:பள்ளி, கல்லூரிகள் அருகே நடக்கும் கஞ்சா விற்பனை தொடர்பாக காவல்துறை மீது பாமக கடும் கோபத்துடன்இருக்கும் நிலையில், சென்னையைக் கலக்கி வந்த கஞ்சா ராணி கிருஷ்ணவேணி உள்பட 3 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை படு அமோகமாகநடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சமீப காலமாக குற்றம் சாட்டி வருகிறார்.
சில முக்கிய கல்லூரிகள், பள்ளிகள் முன்புதான் இது அதிகம் நடப்பதாகவும், காவல்துறை சீரழிந்து, சீர்குலைந்துபோய் கிடப்பதாகவும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை நடக்கிறதா என்பதைக் கண்டறிய போலீஸார்மீண்டும் கஞ்சா ரெய்டில் இறங்கியுள்ளனர். இந்த வேட்டையில் வட சென்னையின் பிரபல கஞ்சாவிற்பனையாளரும், கஞ்சா ராணி என செல்லமாக அழைக்கப்படுபவருமான கிருஷ்ணவேணியை போலீஸார்இன்று கைது செய்தனர்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஆறு.கம் தலைமையில் நடந்த அதிரடி வேட்டையில்கிருஷ்ணவேணி கைதானார். பி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. வட சென்னையில், இவ>டம்தான்சில்லறை கஞ்சா வியாபா>கள் கஞ்சா வாங்குவது வழக்கம்.
இவர் பலமுறை கஞ்சா விற்றதற்காக கைது செய்யப்பட்டவர். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மட்டும் 5 முறைகைது செய்யப்பட்டவர். ஆனாலும் திருந்ததாவர்.
ஷெனாய் நகரில் ஒரு மறைவிடத்தில் இவர் இளைஞர்கள், மாணவர்களிடம் கஞ்சா பொட்டலங்களை விற்பதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து மாறு வேடத்தில் சென்ற போலீஸார் கிருஷ்ணவேணியைக் கைதுசெய்தனர்.
இதேபோல கல்லூரி வாசல் அருகே நின்று கொண்டு கஞ்சா விற்ற கும்மிடிப்பூண்டி மணி என்பவரையும்போலீஸார் வளைத்துப் பிடித்தனர். அவ>டம் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா சிக்கியது.
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு பஸ் மூலம் கஞ்சா கடத்தி வந்த சித்ரா என்ற பெண்ணும் போலீஸ் சோதனையில்சிக்கினார். இவர் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். இவ>டமிருந்து 10 கிலோ எடையுள்ளகஞ்சா மூட்டையை போலீஸார் கைப்பற்றினர்.
இவர் ஒரு மொத்த வியாபாரியாம். இவ>டம் நிறைய பேர் மொத்தமாக கஞ்சா வாங்கிச் சென்று நகர் முழுவதும்விற்று வருகின்றனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications