ஆற்காடுக்கு ஜெ. கடும் எச்சரிக்கை
சென்னை:செய்த குற்றங்களை மறைக்க நீதிபதிகளையும், நீதித்துறையையும் கடுமையாக விமர்சனம் செய்தால், மக்கள் துண்டித்து விடுவார்கள் என்று அமைச்சர்ஆற்காடு வீராசாமிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமீப காலமாக தமிழக அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றதிதற்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது. திமுக அரசைப் பற்றி தலைமைநீதிபதி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முதல்வர் கருணாநிதி முன்னிலையில், ஆற்காடு வீராசாமி கோபம் கொப்பளிக்கப் பேசியுள்ளார். அதை ஆமோதிக்கும் வகையில்கருணாநிதியும் பேசியுள்ளார். இது கண்டனத்துக்குரியது.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக அரசு செய்த அராஜகத்தை நாடே நன்கறியும். ஜனநாயகம் படு குழியில் தள்ளப்பட்டு படுகொலைசெய்யப்பட்டது என்பதை நடுநிலையாளர்களும், பொதுமக்களும் பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.
நீதிமன்றம் இந்த செயலை தவறு என்று சொன்ன பிறகு, மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு காத்திருக்கும் நிலையில், கருணாநிதி 99 வார்டுகவுன்சிலர்களையும் ராஜினாமா செய்யச் சொன்னார். இச்செயலின் மூலம், அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டுதான்கருணாநிதி இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
நீதிமன்றம் கட்டப் பஞ்சாயத்துக்களாக ஆகி விடக் கூடாது, மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை போய் விடும் என்றும் அமைச்சர்பேசியிருப்பது நீதியைக் குறைத்து மதிக்கும் செயல். எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் இனியாவது திருந்துவது நல்லது.
அதை விடுத்து மீண்டும் இது போன்ற தவறுகள் எல்லாம் நாட்டில் நடப்பது சகஜம் தானே என்று பேசினால், நாட்டின் இதயமாக செயல்படும் நீதியைகொச்சைப்படுத்துகின்ற செயலாகும்.
பொறுப்புமிக்க பதவி வகிக்கும் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி ஆகியோர், நீதிபதிகளையும், நீதித்துறையையும் குறைத்து மதிப்பிட்டு பேசுவதின்மூலம் செய்த குற்றங்களை மக்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.
மறதியால் தவறு செய்தால் மக்கள் மன்னித்து விடுவார்கள். அலட்சியத் தவறுகள் ஆனாலும் மக்கள் கண்டித்து விட்டு விடுவார்கள். தெ>ந்தே செய்ததவறுகள் என்றாலும் கூட மக்கள் தண்டித்து விடுவார்கள். ஆனால் தொடரும் தவறுகள் என்கின்ற போது மக்கள் துண்டித்து விடுவார்கள் என்பதைஇவர்கள் விரைவில் உணரப் போகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு:
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து கடுமையாக பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்குக் கண்டனம் தெரிவித்து அவரதுகொடும்பாவியை எரிக்க அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியைத் தொடர்ந்து உயர்நீதிமன்றவளாகத்தில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அதிமுக அந்த வழக்கறிஞர்களுக்கு எதிராக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். இதனால் பெரும் பதட்டம்நிலவியது. இருப்பினும் கொடும்பாவி எதுவும் எரிக்கப்படவில்லை. இதனால் போலீஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications