8ம் தேதி கர்நாடக பந்த்-தமிழக பஸ்கள் ஒசூரில்முடக்கம்-தமிழ் சேனல்கள் தொடர்ந்து கட்
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வரும் வியாழக்கிழமை (8ம் தேதி) முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.இதனால் தமிழர்கள் மத்தியில் பீதி மேலும் அதிகரித்துள்ளது.
தீர்ப்பு வெளியான நேற்று பிற்பகல் முதலே தமிழ் சேனல்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டனர். இதனால் தமிழகத்தில் நடப்பதை அறியமுடியாத நிலையில் கர்நாடக தமிழர்கள் உள்ளனர்.
மேலும் மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
பெங்களூரில் தமிழ்ப் படங்களை திரையிட்டுள்ள தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன அல்லது படங்கள் மாற்றப்பட்டுவிட்டன.
இன்றும் தமிழகத்தில் இருந்து எந்த பேருந்தும் பெங்களூரு, மைசூருக்கு வரவில்லை. ஆம்னி பஸ்கள், தமிழக அரசு பஸ்கள் ஒசூரிலேயேநிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் அதிகாலையில் ஒசூரில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒசூரில் இருந்து கர்நாடக பகுதியில் உள்ள அத்திபலேவரை சுமார் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று பெங்களூருக்குச் செல்லும் பஸ்களை பிடிக்க வேண்டியடஅவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தை சமாளிக்க கர்நாடக அரசு சிறப்பு பஸ்கள் எதையும் இயக்கவில்லை. வழக்கமான டவுன் பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால்இந்த பஸ்களில் குழந்தைகளும், பெண்களும் நெருக்கியடித்துக் கொண்டு பயணம் செய்து வருகின்றனர்.
அதே போல தமிழகத்தில் இருந்து எந்த லாரியும் நேற்று பிற்பகலுக்கு மேல் கர்நாடகத்துக்குள் நுழையவில்லை. அவை ஒசூருக்கு முன்பாகவேபெங்களூர் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெங்களூரை விட மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் தான் அதிக பதற்றம் நிலவுகிறது.
மாண்டியாவில் காவிரி போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் காவிரி ஹிதரக்ஷணா ஹோராட்டா சமிதிஎன்ற அமைப்பு இன்று ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பங்காரப்பா பங்கேற்கவுள்ளார்.
பங்காரப்பா முதல்வராக இருந்தபோது தான் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான இன வெறிக் கலவரம்மூண்டு, 100 பேர் வரை பலியானது குறிப்பிடத்தக்கது.
தமிழக, கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்திலும் பெரும் பதற்றம் நிலவுகிறது.கொள்ளேகால் நகரில் இன்று பந்த் நடத்தப்படுகிறது.
பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் பல பகுதிகளிலும் டயர்களை நடு ரோட்டில் போட்டு எரித்து சிலர்போராட்டம் நடத்தினர்.
நேற்றிரவு பெங்களூர் மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்கு கும்பல்தீ வைத்தது. இதில் அந்த கார் எரிந்து நாசமானது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவாஜி நகர், அல்சூர், ராஜாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
நகரில் பல பள்ளிகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன.
ஆனால், நேற்று பிற்பகலோடு மூடப்பட்ட சாப்ட்வேர் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இன்றுவழக்கம்போல் இயங்கின. நேற்று காணப்பட்ட பதற்றம் இன்று இல்லை. பஸ்கள் வழக்கம்போல்இயங்குகின்றன.
ஆனால் மைசூரில் பதற்றம் நிலவுவதால் பஸ்கள் அதிகமாக இயக்கப்படவில்லை. கடைகள் மூடப்பட்டுள்ளன.
பந்த் தள்ளி போகுமா?:
இந் நிலையில் பெங்களூரில் சர்வதேச விமானக் கண்காட்சி வரும் 9ம் தேதி தொடங்க இருப்பதால் 8ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பந்தைதள்ளிப் போடுமாறு கன்னட அமைப்புகளை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications