காவிரி: கருணாநிதி திருப்தி-வி.பி.சிங்குக்கு நன்றி!
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் மூலம் நீண்ட காலத்திற்குப் பின்னர் நியாயம் கிடைத்துள்ளதாக முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார். அதேசமயம், ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பெரும் அதிருப்திதெரிவித்துள்ளனர்.
டெல்லி சென்றிருந்த முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சென்னை திரும்பினார். அண்ணா அறிவாலயத்தில்செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து கருணாநிதி கருத்து தெரிவிக்கையில், 1991ம் ஆண்டு காவிரிநடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பின்படி நமக்கு 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது.
அதில் 6 டிஎம்சி தண்ணீரை புதுச்சேரிக்கு விட்டது போக 199 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு எனஅறிவிக்கப்பட்டது. தற்போதைய தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்கு 217 டிஎம்சி கிடைக்கப் போகிறது. அதில் 7டிஎம்சி புதுச்சேரிக்குப் போக 210 டிஎம்சி தமிழகத்திற்குக் கிடைக்கும்.
இந்தத் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது. நீண்ட காலமாக நாம் கோரி வந்த நியாயம் கிடைத்ததன் காரணமாகஇந்ததீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது.
1968ம் ஆண்டு, பேரறிஞர் அண்ணாவால், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நான் கர்நாடக முதல்வர்வீரேந்திர பாட்டீலை சந்தித்து காவிரிப் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டேன்.
அதன் பிறகு கர்நாடக முதல்வர்கள் குண்டுராவ், தேவராஜ் அர்ஸ், ராமகிருஷ்ண ஹெக்டே, வீரப்ப மொய்லி,பங்காரப்பா, தேவகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, ஜே.எச்.படேல், தரம்சிங், இன்றைய குமாரசாமி என இதுவரை11 கர்நாடக முதல்வர்களுடன் பேசி விட்டேன்.
அதேபோல மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களான கே.எல்.ராவில் தொடங்கி இப்போது உள்ள சைபுதீன்ஜோஸ் வரை ஐந்தாறு மத்திய அமைச்சர்களோடும் பேசியுள்ளேன். 38 ஆண்டுகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர்முடிவு கிடைத்துள்ளது.
வி.பி.சிங்குக்கு நன்றி:
என்னால்தான் வந்தது என்ற நான் சொல்ல மாட்டேன். அந்தப் பதிலைப் பெற நீங்கள் வேறு ஒருபொதுக்குழுவுக்குப் போக வேண்டும். நடுவர் மன்றத்தை உருவாக்கிக் கொடுத்த வி.பி.சிங்கிற்கு இந்தநேரத்தில், தமிழ்நாடு விவசாயப் பெருங்குடி மக்கள் சார்பாகவும், கர்நாடக மக்கள் சார்பாகவும் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ராமதாஸ் சொல்லியுள்ளார். அது பெரியகஷ்டம் இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம், அவர் கூறுகிற கருத்தையெல்லாம் அதில்பேசலாம்.
தீர்ப்பு குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். இரு மாநிலங்களில் உள்ள மக்கள் ஒற்றுமை உணர்வோடு இந்த முடிவைஏற்றுக் கொள்வார்களேயானால் அப்போதுதான் முழுமையான மகிழ்ச்சி ஏற்படும்.
கர்நாடகத்தில் பந்த் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில்,தமிழகத்தில் உள்ள தமிழர்களும், கர்நாடகத்தில் உள்ள கன்னடியர்களும் பந்துக்களாக இருக்க வேண்டும்என்றுதான் விரும்புகிறோம். எனவே பந்த் வேண்டாம் என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications