இலங்கை: தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் எரிப்பு-சிங்கள கும்பல் அட்டகாசம்
கொழும்பு:இலங்கையில் ரத்னபுரா என்ற இடத்தில் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை சிங்கள வெறியர்கள் குண்டுகளை வீசியும், சூறையாடியும் தீவைத்தும் எரித்தும் நாசப்படுத்தினர். இதனால் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மலையகத் தமிழர்கள் எனப்படும் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் ரத்னபுரா உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
ரத்னபுரா அருகே உள்ள பழத் தோட்டம் எஸ்டேட் என்ற இடத்தில் உள்ள தோட்டத்தில் ஏராளமான தமிழர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.இவர்களின் வீடுகள், நவநகரா என்ற கிராமத்தைத் தாண்டி உள்ளது. இந்த கிராமம், சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாகும்.
தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு இளைஞர்களை அனுப்பி வருவதாக இந்த கிராமத்தைச் சேர்ந்த சிங்கள வெறியர்கள்சமீப காலமாக குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் மலையகத் தமிழர்கள் இதை மறுத்தனர்.
இருப்பினும் தொடர்ந்து தமிழ் தொழிலாளர்கள் மீது காட்டமாக இருந்தனர் சிங்கள வெறியர்கள். இந் நிலையில், சிங்கள வெறிக் கும்பல் ஒன்றுபழத்தோட்ட எஸ்டேட்டுக்குள் புகுந்தது. அங்குள்ள 7 தமிழர்களின் வீடுகளை தீ வைத்துக் கொளுத்தினர். மேலும் 50ம் மேற்பட்ட வீடுகளைகையெறி குண்டுகளை வீசியும், தீ வைத்தும் தாக்கினர்.
தீ வைப்பதற்கு முன் வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து தமிழர்களைத் தாக்கியும், அவர்களின் உடமைகளையும் சூறையாடினர்.மேலும், தமிழ் இளைஞர்கள் அத்தனை பேரையும் தீவைத்து கொளுத்தி விடுவோம் எனவும் எச்சரித்தனர்.
தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளரையும் அந்த வெறிக் கும்பல் கடுமையாக தாக்கி காயப்படுத்தியது. அவர் ரத்னபுராவில்உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிங்கள வெறியர்களின் இந்த தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். தங்களைக் காக்கஎஸ்டேட் நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மீது நவநகராவைச் சேர்ந்த சிங்கள வெறியர்கள் நீண்ட காலமாகவே கோபத்துடன் இருந்து வருகின்றனர்.தமிழர்களைத் தாக்க தக்க சமயம் பார்த்துக் காத்திருந்தனர். தற்போது வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
சிங்கள வெறியர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் சமீபத்தில்தான் இங்கு தோட்டத் தொழிலாளர் சங்கத்தை தமிழ்த் தொழிலாளர்கள்ஆரம்பித்தனர். இதனால் சிங்கள அரசியல்வாதிகள் கோபமடைந்தனர்.
தமிழர்கள் மொத்தமாக சேர்ந்து கொண்டால், தங்களது பிழைப்புக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் அவர்கள் சிங்களர்களைத் தூண்டி விட்டுவந்தனர்.
தற்போது தாக்குதல் நடத்தியவர்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அக்கட்சியின் முனசிங்கே என்பவர் தலைமையில்தான் இந்தக் கும்பல் வந்துள்ளது.
சிங்கள வெறியர்களால் தாக்கப்பட்ட தமிழர்கள் அருகே உள்ள சர்ச்சில் அடைக்கலம் புகுந்துள்ளனர். சிங்களர்கள் மீண்டும் தங்களைத் தாக்கலாம்என அச்சத்தில் உள்ளனர்.
கொழும்பில் 600 தமிழர்கள் கைது:
இதற்கிடையே, தேடுதல் வேட்டை என்ற பெயரில், கொழும்பில் தமிழர்களை தொடர்ந்து ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதைசெய்து வருகிறது.
கொழும்பில் கடந்த சில நாட்களாக தமிழர்களின் வீடுகளில் சோதனை என்ற பெய>ல் அட்டூழியத்தை கட்டவிழ்த்து வருகிறது. பல அப்பாவித்தமிழர்களை ராணுவம் கைது செய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் 600 அப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டல்களில் தங்கியிருக்கும் தமிழர்களையும் கூட ராணுவம் விட்டு வைக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர்பெண்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாகி வருகின்றனர். யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள திருநெல்வேலியில் உள்ளபல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட ராணுவம் அங்கு படித்து வரும் மாணவர்கள் மற்றும் ஆசி>யர்களிடம் விசாரணை என்ற பெயரில்துன்புறுத்தியுள்ளனர்.
ரணில் கட்சியில் மேலும் எம்பிக்கள் தாவல்:
இந் நிலையில் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 10 எம்.பிக்கள் அதிபர்ராஜபக்ஷேவின் சுதந்திராக் கட்சியில் இணைகின்றனர்.
ரணில் கட்சியை அதிபர் ராஜபக்ஷே உடைத்துத் தூள் தூளாக்கும் வேலையில் இறங்கியுள்ளார். அவரது முயற்சியால் சமீபத்தில் 16 முக்கிய எம்.பிக்கள் ரணில் கட்சியிலிருந்து விலகி ஆளும் சுதந்திராக்கட்சியில் இணைந்து அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
இதன் காரணமாக இலங்கை அமைச்சரயிைன் பலம் 106 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் ரணில் கட்சியிலிருந்து மேலும் 10 எம்.பிக்களை ராஜபக்ஷே கட்சி இழுத்துள்ளது. இவர்களுக்கும் அமைச்சர்பதவி கொடுப்பாரா ராஜபக்ஷே என்று தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications