அச்சுவுக்கு எம்ஜிஆர் அமைச்சர்கள் எச்சரிக்கை!
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதற்காககேரள முதல்வர் அச்சுதானந்தன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த ராஜாமுகம்மது, வி.வி.சுவாமிநாதன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்ஜிஆர் அமைச்சரவையில், நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜா முகம்மது. மின்துறை அமைச்சராக இருந்தவர் வி.வி. சுவாமிநாதன்.இருவரும் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, முல்லைப் பெ>யாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்கடிதம் வழங்கியதாக அவருடைய புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் தவறான தகவலை தெ>வித்துள்ளார்.
1979-ம் ஆண்டு முல்லைப் பெ>யாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தரப்பில் ஒரு செய்தி பரப்பப்பட்டது. அப்போதைய மத்தியநீர்வள ஆணையத் தலைவர் கே.சி.தாமஸ், அணையை பார்வையிட்டு அதிக அளவில் வெள்ளநீர் வடிவதற்கு 3 பெரிய மதகுகளை கட்டுமாறுயோசனை தெரிவித்தார்.
இந்த கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதற்காக அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டியிருந்தது. இதற்குத்தான் சம்மதம்தெரிவித்து எம்ஜிஆர் கடிதம் கொடுத்தார். கட்டுமானப் பணிகள் முடிந்து 1980-ம் ஆண்டு மீண்டும் மத்திய நீர்வளத்துறை ஆணையரைச் சந்தித்தபோது எம்ஜிஆர், அணை தற்போது பலப்படுத்தப்பட்டு விட்டது. புதிய அணையைப் போல உள்ளது. இனி இதில் 145 அடிவரை தண்ணீரைதேக்கலாம் என்று தெரிவித்தார்.
எம்ஜிஆரின் இந்தக் கருத்து இந்த கருத்து நீர்வள ஆணைய குறிப்பேட்டிலேயே உள்ளது. ஆனால், இந்த உண்மைகளுக்கு மறைத்து விட்டு தவறானதகவலை அச்சுதானந்தன் தெரிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
எம்ஜிஆர் பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறாகப் பேசியதற்காக அச்சுதானந்தன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீதுஅவதூறு வழக்கு தொடருவோம்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நாங்களும் இணைந்து இந்த மாத இறுதியில் டெல்லிசென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச இருக்கிறோம். உச்சநீதிமன்றத்திலும் இந்த பிரச்சனை தொடர்பாக வழக்குத் தொடரஉள்ளோம்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண கேரளாவில் தற்போது உள்ள முந்தைய தமிழக பகுதிகளான தேவிகுளம், பீர்மேட்டை மீண்டும் தமிழகத்துடன்இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
அப்படிச் செய்தால், முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள மொத்தப் பகுதியும், அணைப் பராமரிப்பும் நம் வசம் வந்து விடும்.
முல்லை பெரியாறு பிரச்சனையில் விவசாயிகள் சார்பாக உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளோம். இப்பிரச்சனைக்கு தீர்வு காண நீர் பாசனம்,மின்சாரம், பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் முன்னாள் அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கமிட்டி ஏற்படுத்த உள்ளோம்.
அந்த கமிட்டியின் தலைவராக முதல்வர் கருணாநிதி இருக்க வேண்டும். அதில் ஜெயலலிதாவும் இருக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications