எஸ்பி அலுவலகத்தில் திருட்டு--எஸ்ஐ கைவரிசை?
நாகப்பட்டனம்:நாகப்பட்டனம் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், காவல் நிலைய லாக்கரை உடைத்துஅதிலிருந்த ரூ. 8 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொருளாதாரக் குற்றப் பிரிவு சப்இன்ஸ்பெக்டர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
நாகப்பட்டனத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி கல்யாணிக்குச் சொந்தமாக 1 ஏக்கர் மற்றும் 3ஆயிரத்து 310 சதுர அடி நிலம் உள்ளது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், துரைராஜ், முத்தழகு, ராஜமாணிக்கம், மதிமன்னன், சிவக்குார் ஆகியோர்,சுனாமி நிரந்தர வீடுகள் கட்டுவதற்காக இந்த நிலத்தை போலியான ஆவணம் மூலம், அரசிடம் விற்று ரூ. 10லட்சத்து ஆயிரத்து 143 ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து தெரிய வந்த பொன்னுச்சாமி சுனாமி நிலம் எடுப்பு தனி தாசில்தாரிடம் புகார் கொடுத்தார்.இதுதொடர்பாக விசாரணை நடத்திய தனி தாசில்தார் கண்ணன், மோசடி நடந்ததை உறுதிப்படுத்திக் கொண்டார்.பின்னர் நாகை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் புகார் பதிவு செய்த போலீஸார் மேற்கண்ட 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை நாகை மாவட்ட எஸ்.பி,. அலுவலக வளாகத்தில்உள்ள பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலைய லாக்கரில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வந்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்தபணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து எஸ்.பி. கல்பனா நாயக்கிடம் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் விரல் ரேகைகளைப் பறிமுதல்செய்தனர். வெளியிலிருந்து வந்து யாரும் திருடியிருக்க முடியாது என்று கூறப்படுகிறது. பொருளாதாரக் குற்றத்தடுப்பு சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் பிரகாஷ் தற்போது ஊரில் இல்லை. விடுமுறையில் உள்ளார்.
அவர் மீதுதான் போலீஸாருக்கு சந்தேகம் பிறந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் அதிரடி சோதனைநடத்தப்பட்டது. பிரகாஷ் ஊரிலிருந்து வந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள எஸ்.பி. அலுவலக வளாகத்திற்குள்ளேயே 8 லட்சம் பணம் திருடுபோயிருப்பது காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications