தமிழர்களை காக்க மத்திய படை-கோர்ட்டில் மனு
சென்னை:கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் மற்றும் அவர்களது உடமைகளை பாதுகாக்க அங்கு துணை ராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசுக்குஉத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் கண்டமங்கலத்தைச் சேர்ந்த இளங்கீரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
1991ம் ஆண்டு தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியபோதுஇடைக்கால உத்தரவை எதிர்க்கும் விதமாக கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டது.
அந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி கர்நாடக அரசு பந்த் அறிவித்தது. மூன்று நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்தன. பொதுமக்களின்உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டது.
மைசூர் மாவட்டத்தில் தமிழர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. தமிழர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. 160 தமிழர்கள்கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டனர். ரூ. 300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இப்போது காவிரி நடுவர் மன்றம் தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மற்றும் அவர்களின்சொத்துக்கள் மீது தாக்குதல் நடக்கக் கூடும். எனவே, கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும் அவர்களது சொத்துக்களுக்கும் பாதுகாப்புஅளிப்பதை உறுதி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு.
கர்நாடக அரசு பந்த் அறிவித்தால், அங்கு வாழும் தமிழர்கள் மீது கடும் தாக்குதல் நடக்கக் கூடும். எனவே, கர்நாடக அரசு பந்த் அறிவிப்பதற்குதடை விதிக்க வேண்டும். கர்நாடகாவில் வாழும் தமிழர்கள், அவர்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க அங்கு துணை ராணுவப் படைகள்அல்லது மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையை அனுப்புமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் இளங்கீரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications