அதிருப்தி அதிமுக எம்எல்ஏ சண்முகம் மரணம்!!
மதுரை:திமுகவுக்கு ஆதரவாக கொடி பிடித்த மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சண்முகம்மாரடைப்பால் மதுரையில் மரணமடைந்தார்.
மதுரை மேற்குத் தொகுதி அதி.க எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சண்முகம். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக திடீரென திமுகவுக்கு சாதகமாக மாறினார்.
மதுரையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சண்முகம், அவரைபலமாக பாராட்டிப் பேசினார். இதனால் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி கிளம்பியது.
அவரைக் கண்டித்து வீட்டை முற்றுகையிட்டு அதிமுகவினர் பாாேராட்டம் நடத்தினர். இருப்பினும் ஜெயலலிதாஉத்தரவைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். சண்முகம் வகித்து வந்த கட்சிப் பொறுப்பைபறித்தார் ஜெயலலிதா. இருப்பினும் அதிமுகவை விட்டு அவர் நீக்கவில்லை. நீக்கினால் திமுகவில் சேர்ந்துவிடவழி ஏற்படும் என்பதால்.
திமுக முகாமுக்கு ஆதரவாக மாறினாலும் கூட சண்முகத்திற்கு அங்கு ஆரம்பத்தில் கிடைத்த கெளரவம்அப்படியே தொடர்ந்து கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதிமுகவினரால் ஆபத்து இருந்ததால் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பில் இருந்து வந்தார்.
இந் நிலையில் மதுரை திருப்பாலையில் உள்ள அவரது வீட்டில் சண்முகத்திற்கு நேற்று இரவு அவருக்குமாரடைப்பும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குஅவரைக் கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து அப்பல்லோ மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். இரவு 10 மணிக்குக் கொண்டுவரப்பட்ட சண்முகத்திற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால் முயற்சிகள் பலன் அளிக்காமல் சண்முகம் இறந்தார்.
மறைந்த சண்முகத்திற்கு வயது 60. சரஸ்வதி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட்கட்சி, ஐக்கிய பொதுவுடமைக் கட்சிகளில் இருந்து பின்னர் அதிமுகவுக்கு வந்தவர். மாநில ஜெயலலிதா பேரவைதுணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மறைந்த சண்முகத்தின் உடல் நத்தம் அருகே உள்ள விளாம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரதுஉடலுக்கு பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications