தரம் குறைந்த நகை: மனைவியுடன் ஆசாரி தற்கொலை
சென்னை:நகை செய்யக் கொடுத்தவர் தரம் குறைந்ததால் போலீஸில் புகார் செய்யப் போவதாக மிரட்டியதால் பயந்துபோன நகை ஆசாரியும், அவரது மனைவியும் விஷம் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (வயது 50). இவரது மனைவிவேலம்மாள் (45). வேலு நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவர்களுக்கு 21 வயதில் கார்த்திக், 18வயதில் முத்து, 13 வயதில் மகேஷ்வரி என 3 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு நள்ளிரவுக்கு மேல் வேலுவின் குழந்தைகள் எதேச்சையாக கண் விழித்துப் பார்த்தபோது தாயும்,தந்தையும் உயிருக்குப் போராடுவதைப் பார்த்து அதிர்ந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் துணையுடன் பெற்றோர்களை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்துபோயினர்.
இருவரும் திராவகம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்கொலைக்குமுன்பு வேலு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில், சமீபத்தில் என்னிடம் ஒருவர் நகை செய்யக் கொடுத்திருந்தார். அதன் மாற்று சற்றே குறைந்திருந்ததால்,கோபமடைந்த அவர் போலீஸில் புகார் செய்யப் போவதாக மிரட்டினார். இதனால் தற்கொலை செய்துகொள்கிறோம். இதற்கு யாரும் பொறுப்பில்லை என்று எழுதப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications