போலீஸ் பயிற்சி பெற்ற ரவுடி, கும்பலுடன் வளைப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:திருச்சியில், போலீஸ் வேலையில் சேர்ந்து பயிற்சி பெற்று, பாதியில் நீக்கப்பட்டவர் தலைமையில் இயங்கியரவுடிக் கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர்.

திருச்சி விமான நிலைய ஸ்டார் நகரைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். தனது நிறுவனத்திலிருந்து ரூ. 16 ஆயிரம் பணத்தை எடுத்துக் காண்டு குண்டூரில் உள்ள கடைஉரிமையாளர் சேகரிடம் கொடுக்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வயர்லஸ் சாலையில் எதிரே டாடா சுமோ காரில் வந்தவர்கள் வீரமணியை தடுத்து நிறுத்தினர்.பின்னர் துப்பாக்கி முனையில் அவரிடமிருந்த பணத்தைப் பறித்தனர்.

தப்பிச் செல்ல முயலுகையில், கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அதற்குள் வீரமணி சுதாரித்துக் கொண்டு குரல்எழுப்பவே அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டு விட்டனர். அனைவரும் சேர்ந்து கொள்ளைக் கும்பலைப்பிடிக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.

போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து நாலாபுறமும் பறந்து ஒரு வழியாக 5 பேர் கொண்டகும்பலை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து வீரமணியிடம் பறிக்கப்பட்ட பணம், துப்பாக்கி, 2 அரிவாள்,துப்பாக்கித் தோட்டாக்கள், கத்தி ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். டாடா சுமோ காரும்பிடிபட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கைதான கும்பலைச் சேர்ந்தவர்கள் திருச்சினம்பூண்டியைச் சேர்ந்த பிரபல ரவுடியான பஞ்சாபி என்கிறபஞ்சாபகேசன், அதே ஊரைச் சேர்ந்த குமார், முருாகானந்தம், செந்தில்குமார், திருச்சி துவாக்குடியைச் சேர்ந்தமனோகரன் ஆகியோர்தான் அந்தக் கும்பலில் இருந்தவர். திருவெறும்பூர் அசோக் என்பவர் தப்பி விட்டார்.

அனைவருமே கபடி வீரர்கள். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். பஞ்சாபிதான் இந்தக்கும்பலின் தலைவன் போல செயல்பட்டு வந்துள்ளார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ. படித்து வருகிறார். கடந்த 2000மாவது ஆண்டுதோகூர் பகுதியில் கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது திருட்டு விசிடி மூலம் புதிய படத்தைஒளிபரப்பியதால் அவரையும், தம்பி சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் பஞ்சாபி ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில், 2001வது ஆண்டு பஞ்சாபிக்கு போலீஸ் வேலைகிடைத்தது. அவர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் பயிற்சியில் சேர்ந்தார். ஆனால் அவர் மீது வழக்குஇருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து காவல் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் முட்டை ரவி கும்பலில் இணைந்தார் பஞ்சாபி. அவருடைய உதவியுடன், தனது நண்பர்களையும்சேர்த்துக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து, அடிதடியில் குதித்தார்.

பஞ்சாபி தலைமையிலான கும்பல், கல்லணை பகுதியில், ஒண்டிச்சாமி என்பவரை வெட்டிக் கொன்றனர். இதில்கைது செய்யப்பட்ட பஞ்சாபி,திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில்விடுதலையாகி வந்தனர்.

அதன் பிறகு இக்கும்பல் கொள்ளையடிப்பதில் தீவிரம் காட்டி வந்தது. வீரமணியிடம் பணத்தைப் பறித்துச் செல்ல

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+