ரஜினி வீடு-பெச்சா பிரதர்ஸ்-பூம் பூம் மாடு!
சென்னை:ரஜினி வீட்டுக்கு பூம் பூம் மாடுகளுடன் வந்த இரு சிறுவர்கள், பாட்ஷாவைக் காண வேண்டும் என்று கூறி, வீட்டுக் காவலாளிகளுடன் சிறிது நேரம்அடம் பிடித்ததால் அங்கு லேசான சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை அருகே உள்ள பெரியபாளையத்தைச் சேர்ந்தவர்கள் எச்சப்பா மற்றும் மாரிமுத்து. இருவரும் அண்ணன் தம்பிகள். இரு சிறுவர்களும் பூம்பூம் மாடுகளுடன் வீடு வீடாக சென்று, நாதஸ்வரம் வாசித்து பணம், உணவு வாங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
நேற்று காலையும் இதுபோல மாடுகளை அலங்கரித்து, தாங்களும் சிறப்பாக அலங்காரம் செய்து கொண்டு மாடுகளுடன் வேலைக்குக் கிளம்பினர்.
ஜெயலலிதா, ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் குடியிருக்கும் போயஸ் தோட்டப் பகுதியில் மாடுகளுடன் வீடு வீடாக விசிட் அடித்தனர்.
அவர்கள் போன வீடுகள் எல்லாம் பெத்த பெத்த பணக்காரர்களின் வீடுகள் என்பதால் வீட்டுக்காரர்களுக்குப் பதில் காவலாளிகள்தான் வந்துமாடுகளைப் பார்த்து மிரண்டனர்.
சில வீடுகளில் பணம் கொடுத்தனர். அவற்றை காவலாளிகள் பெச்சப்பா, மாரிமுத்துவிடம் கொடுத்தபோது அய்யாவுக்கு ஒரு சல்யூட் வை என்றுமாடுகளை அவர்கள் விரட்ட அதுகளும் பவ்யமாக முன்காலைத் தூக்கி காட்டின.
இப்படியாக உலா வந்து கொண்டிருந்த பெச்சப்பாவும், மாரிமுத்துவும், ரஜினி வீட்டுக்கு வந்தபோது இதுதான் ரஜினி வீடு என்று சிலர் கூற குஷியாகிவிட்டனர். காரணம், இருவரும் தீவிர ரஜினி ரசிகர்களாம்.
நாதஸ்வரத்தை எடுத்து வாயில் வைத்து சந்திரமுகியில் வரும் தேவுடா தேவுடா பாடலை இசைக்க ஆரம்பித்தனர். அதைக் கேட்டதும் ரஜினி வீட்டுக்காவலாளிகள் போ போ என்று விரட்டினர். ஆனாலும் பெச்சப்பா பிரதர்ஸ் போவதாக இல்லை.
பாட்ஷாவை பார்த்துட்டு போயிடுறோம், உள்ளே விடுங்களேன் என்று முதலில் கெஞ்சினர். ஆனால் அதெல்லாம் முடியாது கிளம்புங்க என்றுகாவலாளிகள் விரட்டியுள்ளனர். ஆனாலும் பசங்க போவதாக இல்லை.
இதையடுத்து பேசாம போறீங்களா இல்லை மாட்டைப் பிடிச்சு வச்சுக்கட்டுமா என்று காவலாளி ஒருவர் கேட்க, பெச்சப்பா கடுப்பாகி விட்டார்.மாட்டை தொட்டீங்கன்னா, அவ்வளவுதான், அடித்து விடுவோம் என்று சவுண்ட் விட்டனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டு ஆட்கள்கூடிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து காவலாளிகள் அந்த சிறுவர்களிடம் சமாதானமாகப் பேசி, தலைவர் ஊர்ல இல்லை என்று கூறி அவர்களை அங்கிருந்துநகர்த்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications