சென்னை: மின்னணு வாக்குப் பதிவு கிடையாது
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்த கால அவகாசம் இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின்விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வாக்குச் சீட்டு அடிப்படையிலேயேதேர்தலை நடத்த அனுமதி அளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வெங்கடசுப்ரமணியன் என்பவர் சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைபயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாசிலாமணி, இந்த மனு விசாரணைக்கே உகந்ததல்ல. தேர்தல் நடவடிக்கைகள்தொடங்கிய பின்னர் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பகுதி பகுதியாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னைமாநகராட்சியில் காலியாக இருந்த 2 வார்டுகள் உள்பட மொத்தம் 44 வார்டுகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி இடைத் தேர்தல் நடப்பதாக இருந்தது.
அந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் சென்னைமாநகராட்சியின் 98 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ததால் அந்த இடங்களுக்கும் இடைத் தேர்தல்நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே ஒரே மாதிரியாக வாக்குச் சீட்டுக்களையே பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. 100 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த 4830 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். 11 ஆயிரத்து 50 தேர்தல் அலுவலர்கள்தேவைப்படுவர். அவர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு இயந்திரத்தையும் சோதித்து, தரமானதுதான் என்று பெங்களூர் பாரத் மின்னணு நிலையத்தின் சான்றிதழைப் பெற வேண்டும்.
ஆனால் இதற்கெல்லாம் தற்போது போதிய கால அவகாசம் இல்லாததால்தான், வாக்குச் சீட்டு முறைப்படி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதாக இருந்தால் தனியாக வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்படவேண்டும்.இவற்றுக்கெல்லாம் பெருமளவில் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் வாக்குச் சீட்டுமுறையே சிறந்தது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது என்றார்.
மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால், இத்தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதுசாத்தியமே என்று வாதாடினார். மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா,மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்த போதிய அவகாசம் உள்ளது. மத்திய தேர்தல் ஆணையமும் இதற்கு உதவ தயாராக உள்ளது.
ஆனால் மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும்தான் இதை செய்ய விருப்பம் இல்லை என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதிஏ.பி.ஷா, தேர்தல் ஆணையத்துக்கு விருப்பம் இருந்தால் செய்யலாம். தேர்தல்ஆணையம் உண்மையிலேயே ஜனநாயகத்தில் அக்கறை கொண்டிருந்தால், கோர்ட் உத்தரவிடாமலேயே தானாகவே இதை செய்யலாம்.அதுமட்டுமல்ல தேர்தல் பணிகளில் நியமிக்கப்பட உள்ளவர்கள் ஆசிரியர்கள்தான், அவர்களுக்கு அதிக பயிற்சி தேவைப்படாது என்றார்.
இதற்குப் பதிலளித்த மாசிலாமாணி, வாக்குச் சீட்டு முறை மோசமானது என்று கூற முடியாது. இதன் மூலம் 1 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்என்றார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நடக்கவுள்ள தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தசாத்தியமல்லை என்று கூறும் தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
பொது நலன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அவர்கள் 2 வாரங்களுக்கு வழக்கை தள்ளி வைத்தனர். இதைத் தொடர்ந்து, வருகிற 18ம்தேதி நடைபெறவுள்ள சென்னை மாநகராட்சி மறு தேர்தல் வாக்குச் சீட்டுஅடிப்படையிலேயே நடைபெறும் என்பது உறுதியாகி விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications