மோதலை உருவாக்கும் சகுனிகள்: கருணாநிதி
சென்னை:நீதித்துறைக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையே மோதலை உருவாக்க சில விஷமிகள் சகுனி வேலை செய்கிறார்கள். இதற்கு கடுகளவு கூட யாரும்இடம் தரக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், அரசு நிர்வாகமும், நீதித்தறையும் மோதல் போக்கைக் கையாளக் கூடாது. இதற்குஅனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இருவரும் மோதிக் கொள்ளாத நிலையில் இருந்தால்தான் ஜனநாயக செயல்பாடுகளுக்கு நல்லது. கடந்த ஆண்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றஏ.பி.ஷாவை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன்.
இதைத் தொடர்ந்து முந்தைய அரசு நிறைவேற்றாமல் இருந்த உயர்நீதிமன்றத்தின் பல்வேறு வேவைகளை திமுக அரசு நிறைவேற்றிக் கொடுத்தது.இதை உயர்நீதிமன்ற நீதிபதிகளே பாராட்டியுள்ளனர்.
ஆனால் சில விஷமிகளுக்கு இந்த சுமூக நிலை வளருவது பிடிக்கவில்லை. சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த சில விரும்பத்தகாதசம்பவங்களை சாக்கிட்டு தேர்தல் ஆணையர் சந்திரசேகரனுக்கு கட்சி சாயம் பூசி நீதிமன்றத்தை நம்ப வைத்திட சிலர் சகுனி வேலையில் ஈடுபட்டனர்.
அதன் விளைவாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத சில விளைவுகள் ஏற்பட்டு விட்டது. அதைப் பயன்படுத்தி பகையை வளர்க்க முனைவோருக்குகடுகளவு கூட இடம் தரக் கூடாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஐயை தாக்கிய வக்கீல்கள்:
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள்சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதிகளை விமர்சித்துப் பேசிய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு எதிராக அதிமுக மற்றும் சில வக்கீல்கள் சங்கங்களைச் சேர்ந்தவழக்கறிஞர்கள் இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்கள் ஆற்காடு வீராசாமியின் கொடும்பாவியையும் எரிக்க முயன்றனர். இதையடுத்து போலீஸார் அவர்களைத் தடுக்க முயன்றனர். அப்போதுமப்டியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமாரை சில வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கினர். அவரை அருகில் இருந்த போலீஸார் மீட்டுபாதுகாப்பு கொடுத்தனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருவதால் அதிகஅளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications