நாளை இந்தியா-இலங்கை மோதல்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நாளை நடைபெறுகிறது.

இலங்கை அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. நான்கு ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. முதல் போட்டி கொல்கத்தாவில்நாளை நடைபெறுகிறது.

சமீபத்தில் இந்தியா வந்திருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 3-1 என்ற கணக்கில் வென்று தொடரை வென்ற தெம்பில் இந்திய அணி,இலங்கையுடனான தொடரை நாளை தொடங்குகிறது.

சிறிய இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியில் வீரேந்திர ஷேவாக் இடம்பெற்றுள்ளார். அவர் நடுக்கள வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.கங்குலியும், ராபின் உத்தப்பாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவர்.

இலங்கைத் தொட>ல் சிறப்பாக விளையாடும் வீரர்கள்தான் உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படுவார்கள் என இந்தியதேர்வாளர் குழுத் தலைவர் வெங்சர்க்கார் அறிவித்துள்ளார். எனவே அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் தங்களது திறமையைவெளிக்காட்ட முனைப்புடன் உள்ளனர்.

ஷேவாக்குக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. இதில் அவர் சொதப்பினால், உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறும் வாய்ப்பைஅவர் நழுவ விடக் கூடும். அதேபோல இர்பான் பதான், முனாப் படேல் ஆகியோருக்கும் இந்தத் தொடர் ஒரு ஆசிட் டெஸ்ட் போல.

கடந்த ஆண்டு இலங்கை அணி இந்தியாவுக்கு வந்தபோது 6-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இழந்து ப>தாபமாக நாடு திரும்பியது. அதற்குப்பழி தீர்க்கும் வகையில் இந்தத் தொடரில் முழு வீச்சில் அந்த அணி விளையாடக் கூடும்.

இதற்கிடையே, வேகப்பந்து வீச்சாளர்கள் அஜீத் அகர்கர், இர்பான் பதான், யுவராஜ் சிங் ஆகியோர் நாளைய போட்டியில் விளையாடுவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.

அகர்கருக்கு காய்ச்சல் வந்துள்ளதாம். பதானுக்கு தோள்பட்டையில் லேசான வலி தோன்றியுள்ளது. பயிற்சியின்போது அவர் கலந்துகொள்ளவில்லை. யுவராஜ் சிங்குக்கும் முதுகில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.

எனவே இந்த மூன்று பேரும் நாளைய முதல் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா மைதானத்தில் இதுவரை மொத்தம் 14 போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6போட்டிகளில் தோற்றுள்ளது. இலங்கையுடன் விளையாடி ஒரு போட்டியில் வென்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+