14 தேமுதிக வேட்பு மனுக்கள் தள்ளுபடி
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த 14 தேமுதிக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மாநகராட்சி மறு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள் கிழமையுடன் முடிவடைந்தது. 700 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று மனுக்கள்பரிசீலிக்கப்பட்டன.
10 மண்டலங்களிலும், அந்தந்த தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. பரிசீலனையின்போது போதியஆவணங்களை சேர்க்காதது, முறையாக இல்லாத மனுக்கள் என மொத்தம் 31 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இவர்களில் 14 பேர் தேமுதிகவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 பேர் பாஜகவினர், மற்றவர்கள் சுயேச்சைகள்.
நாளைக்குள் மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் பெற்றுக் கொள்ளலாம். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
விஜயகாந்த் கண்டனம்:
சரியான ஆவணங்கள் தாக்கல் செய்யாததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதற்கும் திமுகவையே குற்றம் சாட்டியுள்ளார் விஜய்காந்த். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது திமுகவைச் சேர்ந்தவர்கள் கும்பலாக சென்றுதேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் புகுந்து கொண்டு தேமுதிக மனுக்களைநிராகரிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
மேலும் வேட்பாளர்களையும், அவர்களை முன்மொழிந்தவர்களையும் தனிப்பட்ட முறையில் மிரட்டியுள்ளனர். அதுவுமின்றி வேட்பாளர் வீட்டுக்குச்சென்று தாய்மார்களையும், பள்ளிக்குச் சென்று பிள்ளைகளையும் மிரட்டியுள்ளனர்.
இவர்களின் மிரட்டலுக்குப் பயந்து முன்மொழிந்து கையெழுத்துப் போட்ட பலர் கையெழுத்தே போடவில்லை என்று தப்பித்துள்ளனர்.புரசைவாக்கம், சைதாப்பேட்டை, சேப்பாக்கம் என முக்கிய திமுக புள்ளிகளின் பகுதிகளில்தான்தேமுதிக வேட்பாளர்களின் மனுக்கள் காரணமே சொல்லப்படாமல் நீக்கப்பட்டுள்ளன.
தேர்தல் கமிஷனும், போலீஸ் கமிஷனரும் கை கட்டி வேடிக்கை பார்க்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.
தேமுதிக உற்சாக பிரசாரம்:
வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்ட நிலையில் பிரசாரம் இன்னும் களை கட்டவில்லை. அதிமுகவும், மதிமுகவும் தேர்தலில் போட்டியிடாததால், படுமந்தமாக உளளது.
திமுக தரப்பு நாம் தானே வெற்றி பெறப் போகிறோம் என்ற எண்ணத்தில் மெத்தனமாக உள்ளது. அதேசமயம், தேமுதிக தரப்பில் புதிய உற்சாகம்காணப்படுகிறது. வீடு வீடாக சென்று பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
விஜயகாந்த் வீடடு வீடாக சென்று பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதால் தேமுதிகவினர் மத்தியில் பெரும் நம்பிக்கை நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications