டிராவிடுக்கு வந்த ஆர்.எஸ்.எஸ். சோதனை
நாக்பூர்:ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளிக் கூடத்துக்குப் போய், சூரிய நமஸ்காரம் செய்தால் உடம்புக்கு நல்லது என்று சொல்லப் போக இப்போதுகம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், வித்ய பாரதி என்ற உப அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதும் ஏராளமான பள்ளிக்கூடங்களை நடத்திவருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வித்ய பாரதி பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் 20ம் தேதி சூரிய நமஸ்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் கலந்துகொள்ளுமாறு டிராவிடை அழைத்திருந்தனர். அவரும் வந்திருந்தார்.
மாணவர்களிடையே பேசிய டிராவிட், அனைவரும் சூரிய நமஸ்காரம் செய்வோம். அது நமது உடலை, மனதை வலுப்படுத்தும் என்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் பங்கேற்றனர்.
இங்குதான் வம்பு வந்தது. டிராவிட் எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளிக் கூடத்துக்குப் போகலாம் என கம்யூனிஸ்ட் கட்சிகள்போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பிருந்தா காரத் இதுகுறித்துக் கூறுகையில், தனிப்பட்ட முறையில் டிராவிட் எந்த முடிவையும் எடுக்கலாம். அதையாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும்டிராவிட் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறு.
மத நோக்கத்தைக் கொண்டஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் டிராவிட் பங்கேற்றது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பள்ளி என்று தெரிந்தும் டிராவிட் கலந்துகொண்டது தவறு என்று கூறியுள்ளார்.
ஆனால் டிராவிட் இதை மறுத்துள்ளார். பள்ளிக் குழந்தைகள் கலந்து கொள்ளும் யோகாசன நிகழ்ச்சி என்று கூறித்தான் என்னை அழைத்தனர்.அதனால்தான் நானும் போனேன். இதில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை.
கிரிக்கெட் வீரர்கள் கூட யோகாசனம் செய்கிறோம். இதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று புரியவில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications