விமான கண்காட்சி-கர்நாடக பந்த் 12ம் தேதி
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த பந்த் நாளைக்குப் பதில் 12ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இன்று சர்வதேச விமானக் கண்காட்சி தொடங்கியதாலும், உலகம் முழுவதிலும் இருந்தும் இதற்காக முக்கிய பிரமுகர்களும்பத்திரிக்கையாளர்கள் குவிந்துள்ளதாலும், இந்த நேரத்தில் பந்த் நடத்தி வன்முறை மூண்டால் உலக அளவில் கர்நாடகத்தில் பெயர் கெடும்என்பதால் பந்த் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 8ம் தேதியான நாளை கர்நாடகம் தழுவிய முழு அடைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் கர்நாடகத்தில் பதட்டம்அதிகரித்தது. முழு அடைப்பின்போது பெருமளவில் வன்முறை வெடிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்தது. இதையடுத்து தலைநகர் பெங்களூரு,மைசூர் ஆகிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, பந்த் அறிவிப்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கன்னட அமைப்புகளுக்கு முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், 8ம் தேதி பந்த் நடத்துவது என்ற முடிவை கன்னட அமைப்புகள்கைவிட வேண்டும்.
தீர்ப்பு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவேஅனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு வசதியாக பந்த்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து 8ம் தேதிக்குப் பதில் 12ம் தேதியன்று பந்த் நடத்தப்படும் என கன்னட அமைப்புகள் கூறியுள்ளனர். இதனால் பெங்களூர்உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தற்காலிக நிம்மதி பிறந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications