நீதிபதி மருமகன் மீதே கஞ்சா கேஸ் போட்ட ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:முதல்வராக இருந்த ஜெயலலிதா நீதிபதிகளைத் தாக்கி இழித்துரைத்தால், அது மட்டும் அவர் வாயில் இருந்து சிந்திய முத்துக்களா? என்று முதல்வர்கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,

நீதித்துறையை ஆற்காடு வீராசாமியும் நானும் கேவலப்படுத்தி விட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.இவர் ஆட்சி நடத்திய காலத்தில் நீதித்துறையும் அரசு நிர்வாகமும் ஒற்றுமையாக நடந்து கொண்டதைப் போலவும், நீதிபதிகளையும்,நீதித்துறையையும் இவர் போற்றிப் பாராட்டி வந்ததை போலவும் அறிக்கை விட்டுள்ளார். அப்போது நீதிமன்றங்களை எந்த அளவுக்கு இழிவாகமதித்து நடந்தார் என்பதற்கு பல உதாரணங்களை கூறிட முடியும்.

நீதிபதி ஒருவர் தனது ஆட்சியைப் பற்றி தீர்ப்பில் கண்டனம் தெரிவித்தார் என்பதற்காக நீதிபதியின் இல்லத்துக்கே குடிநீர் வினியோகத்தையே தடைசெய்யச் சொன்னவர் தான் ஜெயலலிதா.

உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நீதிபதி அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.அவர் மீதுள்ள வெறுப்பைக் காட்ட, அந்த நீதிபதியின் மருமகன் வீட்டில் போலீஸ் மூலமாகவே கஞ்சாவை வைத்து, அவர் மீது வழக்கு போடச்செய்தவர் தான் ஜெயலலிதா.

இதையெல்லாம் விட கடந்த 2005ம் ஆண்டு முதல்வராக சட்டசபையில் அவர் பேசும் போது, ""நீதிபதிகள் சில சமயங்களில் பேசக் கூடாதவற்றைஎல்லாம் நீதிமன்றங்களில் பேசுகின்றனர். இதையே நாங்கள் பேசினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவார்கள். ஆனால், நீதிபதிகள் என்னசொன்னாலும், என்ன செய்தாலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அல்லது கண்டனம் தெரிவித்து நாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், எங்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும். ஆனால், நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், என்று கூறினார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா நீதிபதிகளைத் தாக்கி இழித்துரைத்தால், அது மட்டும் அவர் வாயிலிருந்து சிந்திய முத்துக்களா? என்று கேட்டுள்ளார்கருணாநிதி.

தொண்டர் குடும்பத்துக்கு கருணாநிதி உதவி:

இந் நிலையில் தன்னை வரவேற்று சுவர் விளம்பரம் எழுதிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த தொண்டரின் குடும்பத்துக்கு ரூ. 1லட்சம் நிவாரணத் தொகையை கருணாநிதி வழங்கினார்.

கடந்த ஜனவரி 31ம் தேதி நாகப்பட்டனம் சென்றிருந்த கருணாநிதி, அங்கு மாதா அமிர்தானந்த மயி மடம் சார்பில் சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை அவர் வழங்கினார்.

கருணாநிதியை வரவேற்று சுவர் விளம்பரம் எழுதும் பணியில் நாகை மாவட்டம் பனமேடு கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ், அவரது மகன் செல்லமுத்துஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் மோதி இருவரும் பலியானார்கள். அவர்களது குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 1 லட்சம்வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+