இறுதித் தீர்ப்பில் கூடுதல் நீர்: கருணாநிதி
சென்னை:காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை விட கூடுதலாகவே இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு ஆறுதல் தருகிறது என்று நான் சொன்னதை, மகிழ்ச்சி தருகிறது என்று அர்த்தப்படுத்திக் கொண்டு, ஜெயலலிதா அறிக்கைவிட்டது மாத்திரமல்லாமல்,
நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை விட தண்ணீர் அளவு குறைவாகக் கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இடைக்காலத் தீர்ப்பின்படி மேட்டூர் அணைக்கு 205 டிஎம்சி தண்ணீர் வர வேண்டும். இதில் புதுச்சேரிக்கு 6 டிஎம்சி போக மீதம் 199 டிஎம்சிதண்ணீர்தான் கிடைத்தது.
தற்போது வெளியாகியுள்ள இறுதித் தீர்ப்பில், பில்லிகுண்டுவில் 192 டிஎம்சி தண்ணீர் விடப்பட வேண்டும். அங்கிருந்து மேட்டூருக்கு இடையில்கிடைக்கக் கூடிய 25 டிஎம்சி தண்ணீரையும் சேர்த்தால், மேட்டூரில் 217 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். இதில் புதுச்சேரிக்கு 7 போக மீதம் 210 டிஎம்சிதண்ணீர் தமிழகத்திற்குக் கிடைக்கும்.
இது எப்படி இடைக்காலத் தீர்ப்பை விட இறுதித் தீர்ப்பிலே குறைந்து விட்டது என்று பொருளாகும்?
இந்த இறுதித் தீர்ப்பை ஏற்க முடியாத தீர்ப்பு என்று கூறியுள்ள ஜெயலலிதா, இத் தீர்ப்பை தாமதமின்றி மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்என்று கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications