கொழும்பு குண்டுவெடிப்பு: 17 பேர் படுகாயம்
கொழும்பு:இலங்கை சுதந்திர தினத்தையொட்டி கொழும்பு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில், குண்டுவெடித்தது. இதில் 17 பேர் படுகாயம்அடைந்தனர்.
இலங்கையில் வருகிற 11ம் தேதி 59வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கொழும்பில் நான்கு நாள் கண்காட்சிக்குஅரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்காட்சியில் இலங்கை ராணுவத்தின் அரங்கும் இடம் பெற்றுள்ளது. அதில், விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்ற ஆயுதங்கள், கை எறிகுண்டுகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவை குறித்து பொதுமக்களிடம் ராணுவ அதிகாரி ஒருவர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு கை எறி குண்டு வெடித்தது.இதனால் அந்த அரங்கில் இருந்த 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த அனைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications