மாமல்லபுரம் கடலில் மூழ்கி மதுரை ஜோடி பலி
மாமல்லபுரம்:மதுரையைச் சேர்ந்த காதல் ஜோடி, மாமல்லபுரம் சென்றபோது கடலில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
மதுரையைச் சேர்ந்தவர்கள் ராம்சங்கர் (22), சுபஸ்ரீ (23). இருவரும் சென்னையில் உள்ள கால்டாக்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
ராம்சங்கர் மடிப்பாக்கத்தில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். சுபஸ்ரீ மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். ஒரே ஊர் என்பதால் இருவரும்நட்போடு பழகினர், அது காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி பிக்னிக் செல்வது வழக்கம். அதேபோல, ஞாயிற்றுக்கிழமையன்று இருவரும் மாமல்லபுரம் சென்றனர்.அங்குள்ள தமிழ்நாடு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
பிற்பகல் 2 மணியளவில் கடலில் குளிக்கச் சென்றனர். ஆழமான இடத்திற்கு அவர்கள் சென்றபோது அங்கே குளிக்கக் கூடாது, ஆபத்தான பகுதி,அலைகள் வலுவாக இருக்கும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
ஆனால் காதலின் வேகத்தில் அதைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்த இருவரும் கடலில் நீந்திக் குளித்துக் களித்தனர். அப்போது பெரிய அலைஒன்று வந்தது. ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்த ராம்சங்கரையும், சுபஸ்ரீயையும் அப்படியேவாரி இழுத்துக் கொண்டு கடலுக்குள் கொண்டு சென்று விட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். இருவரது உடல்களையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால் மாலை வரைஉடல்கள் கிடைக்கவில்லை. இரவில்தான் இருவரது உடல்களும் கரை ஒதுங்கின.
இருவரது பெற்றோருக்கும் போலீஸார் தகவல் தெரிவித்து பிணங்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காகஅனுப்பினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications