பெப்சி நிறுவன தலைவரானார் இந்திரா நூயி
நியூயார்க்:அமெரிக்காவின் பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக இந்திய, அமெரிக்கரான இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி முறைப்படிதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மே மாதம் 2ம் தேதி அவர் இப்பொறுப்பை ஏற்பார்.
![]() |
பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தற்போது இந்திரா உள்ளார். கோகோ கோலா நிறுவனத்தின் போட்டியை சமாளித்து அந்தநிறுவனத்திற்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் பல்வேறு விதமான வியாபாரஉத்திகளைப் புகுத்தி பெப்சி நிறுவனத்திற்குப் புது கெளரவத்தைத் தேடிக் கொடுத்தவர் இந்திரா.
இதன் காரணமாக உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணியாக டைம்ஸ் பத்திரிக்கை இந்திரவுக்கு புகழாரம் சூட்டியது. அமெரிக்காவின் தலைசிறந்த 10 பெண் தலைமை செயல் அதிகாரிகளில் இந்திராவுக்கு 2வது இடம் கிடைத்தது.
சென்னையில் பிறந்து வளர்ந்தவரான இந்திரா, தற்போது பெப்சி நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு உயர்ந்துள்ளார்.
தற்போதைய தலைவர் ஸ்டீவன் ரேமன்ட் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு இந்திரா வருகிறார். அவரது நியமனம்குறித்து பெப்சி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து இந்திரா கூறுகையில், இது பெருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. என் மீது போர்டுஇயக்குநர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.
ஸ்டீவன் வழியில் நானும் பெப்சி நிறுவனத்தை உயர்த்த பாடுபடுவேன். பெப்சி நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியருடனும் இணைந்து பணியாற்றஆர்வமாக உள்ளேன் என்றார் இந்திரா.
1955ம் ஆண்டு அக்டோப்ர் 28ம் தேதி சென்னையில் பிறந்தார் இந்திரா. சென்னை தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர்,இந்தியாவிலேயே எம்.பி.ஏ படிப்பையும் முடித்தார்.
பின்னர் இங்கிலாந்தின் ஏல் பல்கலைக்கழகத்தில் பொது மற்றும் தனியார் நிர்வாகத்தில் மேல் படிப்பை படித்தார். அவரது கணவர் ராஜ் நூயி. அவரும்நிர்வாகத் துறையிலேயே உள்ளார்.
கடந்த மாதம் குடியரசு தின விழாவின்போது இந்திராவுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்து கெளரவித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications