திடீரென உதயமான சேலம் ரயில்வே கோட்டம்!:அதிகாரி நியமனம்-கேரளத்துக்கு வேலு ஆப்பு!!
சேலம்:சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் திடீரென நேற்றே உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த கோட்டத்தைத் தடுக்க கேரள அரசும் தென்னக ரயில்வேயில்உள்ள சில மூத்த மலையாள அதிகாரிகளும் உள் குத்து வேலையில் இறங்கியதால் கோட்ட அலுவலகத்தை ஏப்ரல் 14ம் தேதிக்கு பதிலாக நேற்றேஉருவாக்கிவிட்டார் ரயில்வே இணையமைச்சர் வேலு.
பாலக்காடு கோட்டத்தில் உள்ள 708 கிமீ பாதையும், திருச்சி கோட்டத்திலுள்ள 135 கிமீ பாதையும் சேர்த்து சேலம் கோட்டம் அமைக்கப்படுகிறது.சேலம் ரயில்வே கோட்ட அலுவலக கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஏப்ரல் 14ம் தேதி நடக்கவுள்ளது.
இதற்கிடையில் ரயில்வே கோட்டம் அமைக்கவிடாமல் தடுப்போம், இதைப்பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதுவோம் என்று கேரள முதல்வர்அச்சுதானந்தன் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தென்னக ரயில்வேயில் உள்ள சில மூத்த மலையாள அதிகாரிகளும் இந்த கோட்டம்உருவாவதைத் தடுக்க உள்ளடி வேலைகளில இறங்கினர். கேரள அரசியல் லாபியும் டெல்லியில் உள் குத்து வேலை பார்த்தது.
ஆனால், இதையெல்லாம் முறியடித்து கோட்டத்தை உருவாக்கியுள்ள ரயில்வே இணையமைச்சர் வேலு. ஏப்ரல் 14 வரை காத்திருந்தால் எதையாவதுசெய்து திட்டத்தை முடக்குவார்கள் என்பதால் நேற்றே கோட்டம் தொடர்பான பணிகளை துவக்க திடீர் உத்தரவு பிறப்பித்தார் வேலு.
இதையடுத்து கோட்ட அலுவலகம் குறித்த டிஜிட்டல் பேனர் தயார் செய்யப்பட்டது. நேற்று காலை 10.30 மணிக்கு சேலம் ரயில்வே ஊழியர்கள்,சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கான புதிய போர்டை சூரமங்கலத்தில் உள்ள ரயில்வே காலனி முன் அதிரடியாக நிறுத்தினர்.
ரயில்வே கோட்ட அலுவலகத்தின் வணிகப் பிரிவு, தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில்தற்காலிகமாக தொடங்கப்பட்டு தனது பணியையும் தொடங்கிவிட்டது.
சென்னை உதவி வணிக மேலாளர் ஈஸ்வரன், சேலம் கோட்ட வணிகப் பிரிவுக்கான அலுவலராக தற்காலிகமாகநியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து ரயிலில் எமர்ஜென்சி கோட்டாவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பயணிகள் இனிமேல்சேலத்திலேயே விண்ணப்பிக்கலாம். முன்பு இதற்காக சேலத்திலிருந்தும், கோவையிலிருந்தும், ஈரோட்டிலிருந்தும்பாலக்காட்டுக்கு ஓட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சேலம் கோட்ட வணிகப் பிரிவுக்கான ஃபேக்ஸ் வசதியும் உருவாக்கப்பட்டுவிட்டது. ஃபேக்ஸ்எண்கள்:2441100, 2448822 ஃபேக்ஸ் மூலம் எமர்ஜென்சி கோட்டாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
விரைவில் பர்சனல் பிராஞ்ச், இன்ஜினியரிங் பிரிவு, சிக்னல் மற்றும் டெலி கம்யூனிகேஷன், தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளுக்கும் தனித்தனிஅலுவலகங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதைடுத்து முறைப்படி கோட்ட அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா திட்டமிட்டபடி ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டில் நடக்கும். இதில்பிரதமர், முதலமைச்சர், மற்றும் மத்திய அமைச்சர்கள பங்கேற்க உள்ளனர்.
கேரளத்தைப் போலவே மிக ரகசியமாக செயல்பட்டு கோட்ட அலுவலகத்தை திறந்துள்ளார் வேலு. தமிழக திட்டத்தை தடுக்க முயன்ற கேரளத்துக்குஇதன் மூலம் அதிர்ச்சி வைத்தியம் தரப்பட்டுள்ளது.
கேரள எம்.பி க்கள் வெளிநடப்பு:
முன்னதாக பாலக்காடு ரயில்வே கோட்டத்தை பிரிப்பது குறித்து திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் 21 கேரள எம்பிக்களும்வெளிநடப்பு செய்தனர்.
இம் மாதம் 26 ம்தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
இதில் தென்னக ரயில்வே பொது மேலாளர் தாமஸ் வர்கீஸ், பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் ஹரித், மதுரை மேலாளர் ஹேமந்த் குமார்,திருவனந்தபுரம் மேலாளர் விஜயகுமாரன் மற்றும் கேரளா எம்பிக்கள் சந்திரப்பன், இஸ்மாயில், அஜித்குமார் மற்றும் 21 கேரள எம்பிக்கள் கலந்துகொண்டனர்.
பாலக்காடு கோட்டம் பிரிப்பது குறித்து விவாதம் நடந்த எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதில் தெற்கு ரயில்வே பங்கு எதுவுமில்லை,ரயில்வே வாரியம் தான் முடிவு எடுத்தது என்று பதில் கூறப்பட்டது. ஆனால், இதை ஏற்காத எம்பிக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது தாம்ஸ் வர்கீஸ், கோட்டம் பிரிப்பது கடந்த பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டது. சேலம் கோட்டத்திற்கு முதலில் 800 கி.மீ எல்லைநிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இப்போது 450 கி.மீ எல்லை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். இவரும் கேரளத்தைச்சேர்ந்தவரே.












Click it and Unblock the Notifications