எஸ்.வி.சண்முகம் உடல் சொந்த ஊரில் அடக்கம்
திண்டுக்கல்:மதுரையில் மரணமடைந்த அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகத்தின் உடல், அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம்விளாம்பட்டியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சண்.கம். இவர் சமீபத்தில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். திமுகவுக்கு சாதகமாகதிரும்பினார்.
இதையடுத்து அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டார் சண்முகம். ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. இதனால் திமுகவில் போய்ச் சேர முடியாமல்அவதிப்பட்டு வந்தார்.
திமுகவிலும் அவர் ஆரம்பத்தில் கவனிக்கப்பட்டதைப் போல தொடர்ந்து கவனிக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டார். இந்த நிலையில், மாரடைப்பால்மதுரையில் நேற்று முன்தினம் அவர் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளசொந்த ஊரான விளாம்பட்டிக்கு சண்முகத்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அவரது உறவினர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக கூடி சண்முகத்தின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழகஅரசின் கொறடா சக்ரபாணி, மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழி, மாநகராட்சிஆணையர் தினகரன், சோழவந்தான் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பி.மூர்த்தி உள்ளிட்டோர் சண்முகத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சண்முகத்தின் வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவரது மகன் மாணிக்கம் இதைச் செய்தார். பின்னர் சண்முகத்தின் உடல் அவருக்குசொந்தமான தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கு உள்ளிட்டவற்றில் அதிமுகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications