காவிரி நீர் பங்கீட்டை கண்காணிக்க ஆணையம்!
சென்னை:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் உள்பட எந்த மாநிலத்தாலும் ஏற்க முடியாது என்று கூற முடியாது என்று மத்திய நீர்வளத்துறைஅமைச்சர் சைபுதீன் சோஸ் கூறியுள்ளார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சோஸ் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடுவர் மன்றத் தீர்ப்புஎன்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் போன்றதாகும். இதை அனைவரும் மதிக்க வேண்டும்.
கர்நாடகம் இந்த்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் இருந்தால், தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கைஎடுக்கும்.
நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறியுள்ளபடி நதி நீர்ப் பங்கீட்டைக் கண்காணிக்க கண்காணிப்பு ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைக்கும். தீர்ப்பைமுழுமையாக அமல்படுத்த ஒரு ஆண்டு வரை காலம் ஆகலாம்.
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரம் ஆந்திர, தமிழக அரசுகளுக்கு இடையிலான பிரச்சினை. அதை இரு மாநிலங்களுமே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
கர்நாடகம் தீர்ப்பை ஏற்காமல் முரண்டு பிடித்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு சோஸ் பதிலளிக்கையில், அதை எப்படிகர்நாடகத்தால் மறுக்க முடியும்? என்றார்.
சென்னை பயணத்திற்கான காரணம் குறித்து கேட்டபோது, இதில் அரசியல் எதுவும் இல்லை. மழை நீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் சேகரிப்புகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கவே சென்னை வந்தேன். முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளேன். அப்போதுஅரசியல் பேச்சு இருக்காது என்றார்
இதையடுத்து சோஸ், கருணாநிதியை சந்திக்கக் கூடும் என்ற செய்தி பரவியதால், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் செய்தியாளர்களும்,கேமராமேன்களும் குவிந்தனர். ஆனால் சோஸ் வரவில்லை. இறுதியில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
காவிரி விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் கருணாநிதியை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சந்தித்தால் அதை கர்நாடகம் அரசியலாக்கலாம்என்பதால் இச் சந்திப்பு ரத்து செயப்பட்டதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications