வேலை உத்தரவை கொடுக்க மறுத்த ஆசிரியர்!மாணவர் தற்கொலை-பாலிடெக்னிக் சூறை!!
பரமக்குடி:மாணவருக்கு வந்த வேலை நியமன உத்தரவைக் கொடுக்க பாலிடெக்னிக் ஆசிரியர் மறுத்து விட்டதால் மனம்உடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் கொதிப்படைந்த மாணவர்கள்பாலிடெக்னிக்கை அடித்து நொறுக்கி பொருட்களை சூறையாடினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. பரமக்குடி அருகேசோமநாதநகர் என்ற இடத்தில் தனியார் பாலிடெக்னிக் உள்ளது. இங்கு பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்(22) எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் பட்டயப் படிப்பு படித்து வந்தார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கண்ணனுக்கு தந்தை இல்லை. தாயார் மட்டும்தான் உள்ளார். படிப்புக்குத்தேவையான பணத்துக்காக படிக்கும் நேரம் போக பகுதி நேரமாக வேலை பார்த்து படித்து வந்தார் கண்ணன்.
பாலிடெக்னிக்கிலேயே கண்ணன்தான் முதல் மதிப்பெண் எடுப்பாராம். சிறந்த படிப்பாளியாக மட்டுமல்லாமல்நல்ல உழைப்பாளியாகவும் திகழ்ந்து வந்தார் கண்ணன்.
சமீபத்தில் மதுரையில் நடந்த ஒரு தனியார் நிறுவனம் நடத்திய நேர்முகத் தேர்வுக்கு கண்ணன் நண்பர்களுடன்சென்றிருந்தார். அதில் கண்ணன் உள்பட 3 பேர் தேர்வு பெற்றனர். வேலை நியமன உத்தரவை பாலிடெக்னிக்முகவரிக்கு அனுப்புவதாக அந்த நிறுவனம் கூறியிருந்தது.
அதன்படி கண்ணன் படித்து வந்த துறையின் தலைவர் தங்கபாரதியின் பெயருக்கு வேலை நியமன உத்தரவுக்கடிதம் வந்துள்ளது. ஆனால் அந்தக் கடிதத்தை கண்ணனிடம் கொடுக்க மறுத்துள்ளார் தங்கபாரதி. இதனால்வேதனை அடைந்தார் கண்ணன்.
கடைசி முறையாக நேற்று காலை போய் தங்கபாரதியிடம் கடிதத்தைத் கேட்டுள்ளார் கண்ணன். ஆனால் முடியாதுஎன்று அந்த கொடூர ஆசிரியர் கூறி விட்டதால் கண்ணீர் விட்டு அழுதவாறு வெளியேறினார். பின்னர்விஷத்தைக் குடித்துள்ளார்.
மயங்கிய நிலையில் கிடந்த கண்ணனைப் பார்த்த பாலிடெக்னிக் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாகஅரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார்.
இதையடுத்து மாணவர்கள் பெரும் கோபமடைந்தனர். பாலிடெக்னிக்குக்கு விரைந்த அவர்கள் அனைத்துமாணவர்களையும் சேர்த்துக் கொண்டு வகுப்பறைகளுக்குள் நுழைந்து அங்கிருந்து பொருட்களை அடித்துநொறுக்கினர்.
கம்ப்யூட்டர்கள், மேசைகள், நாற்காலிகள் என கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கிசூறையாடினர். அப்படியும் ஆத்திரம் தாளாமல், கண்ணில் பட்ட ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஊழியர்களையும்ஓட ஓட அடித்தனர்.
மேலும், ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையிலும் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால்அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. கடைகளும் அடைக்கப்பட்டன.
தகவல் அறிந்துதம் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துசாமி, எஸ்.பி. திருஞானம் ஆகியோர் விரைந்து வந்தனர்.மாணவர்களை சமாதானப்படுத்திய போலீஸார் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர் தங்க பாரதி மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தைத் திரும்பப்பெற்றனர்.
கண்ணனின் தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாக தங்கபாரதி, அவருக்கு உடந்தையாக இருந்த கல்லூரிமுதல்வர் கமலநாதன், பேராசிரியர் பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications