கர்நாடக அரசுக்கு மாநில திமுக முழு ஆதரவு!
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை முழுமையாகஆதரிப்பதாக கர்நாடக மாநில திமுக, பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கர்நாடக மாநில திமுக செயலாளர் கிள்ளிவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் காலம் காலமாகவாழ்ந்து வருகிறார்கள். இம்மாநில நலன்தான் கர்நாடகத் தமிழர்களின் நலனும் ஆகும்.
எனவே கர்நாடக மக்களின் ஒட்டுமொத்த நலன் கருதி, காவிரி இறுதித் தீர்ப்பு குரித்து முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கர்நாடக மாநில திமுக முழுமையாக ஆதரவளிக்கும், ஒத்துழைப்பு தரும்.
தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது போல, கன்னட மக்களும், தமிழ் மக்களும் பந்துக்குள்காவே இருக்க விரும்புகிறோம் என்று கிள்ளிவளவன்தெரிவித்துள்ளார்.
பந்த்துக்கு தமிழ்ச் சங்கம் ஆதரவு:
இதேபோல 12ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக பந்த்தில், தமிழர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பெங்களூர் தமிழ்ச் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.
சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 1991ம் ஆண்டு நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புவெளியானபோது கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது. முன்பு கலவரம் ஏற்பட்ட தமிழர் வாழும் பகுதிகளில் பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில்10 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்த விழிப்புணர்வு பற்றி தமிழர்களிடையேயும், பாதுகாப்புகள்குறித்தும் போலீஸாருடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
நந்தினி லே அவுட், காவேரி நகர், கண்டீரவா நகர், கமலா நகர், காமாட்சிபாளையம், லக்கேரி, லட்சுமிதேவி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில்பொதுமக்களைச் சந்தித்து தமிழ்ச் சங்கக் குழுவினர் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினர்.
கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு இதுதான் சொந்த மண். எனவே நாம் கன்னட மக்களுக்கோ, கன்னட மொழிக்கோ ஒருபோதும் எதிரிகள்அல்லர். எனவே பிப்ரவரி 12ம் தேதி நடைபெறும் பந்த்தில் கர்நாடகத் தமிழர்களும் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்சண்முகசுந்தரம்.
தமிழர் பாதுகாப்பு-கர்நாடக சட்டசபையில் பேச்சு
இந் நிலையில் கர்நாடக தமிழர்களும் கர்நாடக மக்களே, எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்ரோஷன் பெய்க் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து கர்நாடக சட்டசபையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் விதாத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அறிவித்த பிறகு கர்நாடகாவில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியுள்ளது. சட்டம் ஒழங்கை காப்பற்றவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
கர்நாடகாவில் சிறுபான்மை மொழியினரான தமிழர் பெரும் பீதி அடைந்துள்ளனர். பயந்து வாழ்கின்றனர். கர்நாடகாவில் வாழும் தமிழர்களும்கன்னடர்களே. எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
பெரும்பாலும் கூலி வேலை செய்வோர் தமிழர்கள். கட்டட தொழிலிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். உயிருக்கும், உடமைக்கும் பயந்து கட்டிடகூலித் தொழிலாளர்கள் பலர் பெங்களூரை விட்டே வெளியேறியுள்ளனர்.
ஆகவே தமிழக்ளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் குமாரசாமி மேற்கொண்ட பாதுகாப்புநடவடிக்கையை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன் என்றார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் குமாரசாமி பேசுகையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வரும் முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மொழியினரையும் பாதுகாக்க அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. இதில் யாரும் கவலை பட தேவையில்லைஎன்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications