காவிரி-போராட்டத்தில் குதிக்கும் கன்னடதிரையுலகம்: தலைமை-சரோஜா தேவி!
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைக் கண்டித்து பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தலைமையில் பெங்களூரில் பேரணி நடத்த கன்னட திரையுலகம்முடிவு செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கன்னட சங்கங்கள் அறிவித்துள்ள பந்த்துக்கு கன்னட திரையுலகம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும் பல படங்களில் எம்ஜிஆரோடு ஜோடி போட்டு தமிழ் சினிமாவை ஆண்ட சரோஜா தேவி தலைமையில் பெங்களூரில் பேரணி நடத்தவும்அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
![]() |
இந்தப் பேரணியில் மறைந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக இன்று கூடி ஆலோசிக்கின்றனர்.
அம்பரீஷ் மிரட்டல்:
இதற்கிடையே, காவிரி பாசனப் பகுதி மாவட்டமான மாண்டியா தொகுதியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பியும், நடிகரும், நடிகர் ரஜினிகாந்த்தின் மிகநெருங்கிய நண்பருமான அம்பரீஷ், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.
![]() |
இவர் தற்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக உள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு இல்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
மாண்டியா விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக எனது பதவியைத் தூக்கி எறியத் தயார் என்று அவர்கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications