குவைத் குடியேற்ற பெர்மிட்-பிறர்க்கு மாற்றலாம்
குவைத்:குவைத்தில் தங்கிப் பணியாற்றி வரும் வெளிநாட்டினர், தங்களுக்கான குடியேற்ற பெர்மிட்டை வேறு ஒருவருக்கு மாற்றித் தரலாம் என குவைத் அரசுஅறிவித்துள்ளது.
இதுகுறித்து குவைத் சமூக விவகாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், குவைத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்தங்களுக்கு வழங்கப்பட்ட குடியேற்ற பெர்மிட்டை, வேறு ஒருவருக்கு மாற்றுவதற்கு தற்போது அனுமதிஇல்லை. இந்தக் கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.
இதன் மூலம் குடியேற்ற பெர்மிட்டை பெற நிலவி வந்த சிரமங்கள் குறையும். மேலும் இதுதொடர்பாக வந்துள்ள புகார்களை விசாரிக்க கமிட்டிஒன்றும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தொழிலாளி கத்தாரில் மாயம்:
இதற்கிடையில் கத்தார் நாட்டில், எண்ணை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த கேரளாவைச் சேர்ந்த தொழிலாளரைக் காணவில்லை. அவர் கடலில் விழுந்து இறந்திருக்கக் கூடும் எனசந்தேகிக்கப்படுகிறது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொங்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் அப்புண்ணி (31). இவருக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. கத்தாரில் உள்ள எண்ணை நிறுவனம் ஒன்றில்வேலை பார்த்து வந்தார்.
கடந்த வெள்ளிகிழமையிலிருந்து இவரைக் காணவில்லை என்று சக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அன்று காலை 5. 30 மணிக்கு கடைசிாயக அவரை பார்த்ததாக அவருடன் வேலை பார்க்கும்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை எண்ணை வளத்தை ஆராயும் பணி நடந்து கொண்டிருந்தபோது, கப்பலில் நின்றிருந்த அப்புண்ணி தவறி கடலில் விழுந்திருக்கக் கூடும் என அவர் வேலை பார்த்து வந்த நிறுவனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த நிறுவனத்தின் கப்பல்ககள், அப்புண்ணியைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இருப்பினும் அப்புண்ணி குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
கல்யாணத்திற்குப் பிறகு 2 மாதங்களுக்கு முன்புதான் அப்புண்ணி மீண்டும் வேலையில் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications