பிளஸ்டூ மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து
சென்னை:சென்னை திருவொற்றியூர் அருகே பிளஸ்டூ படிக்கும் மாணவியை வழிமறித்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் அந்தமாணவியின் உடலில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
திருவொற்றியூர் அருகே கரிமேடு என்ற இடத்தில் ரயில்வே காலனி பகுதியில் குடியிருப்பவர் பால். ரயில்வே ஊழியரான இவரது மகள் ஜெசி. 17வயதாகும் இவர் பரங்கிமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகிறார்.
தினசரி தண்டையார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் பரங்கிமலை சென்று பள்ளிக்குப் பாவது வழக்கம். நேற்று காலை 7. 30 மணிக்கு வழக்கம்போல அவர் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ரயில்வே நிலையத்தை அவர் நெருங்கியபோது திடீரென நான்கு பேர் கொண்ட ஒருகும்பல் அவரை வழிமறித்தது.
பின்னர் அந்தக் கும்பல் ஜெசியை சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் ஜெசி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இந்த சம்பவத்தைப் பார்த்தபொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் சுதாரித்துக் கொண்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். ஜெசியை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தாக்குதலில்அவரது கை விரல்களில் 2 துண்டாகி விட்டது. அந்த விரல்களை போலீஸார் தேடிக் கண்டுபிடித்து டாக்டர்களிடம் ஒப்படைத்தனர். பிளாஸ்டிக் சர்ஜரிமூலம் அந்த விரல்களை ஒட்டி விடலாம் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தள்ளனர்.
மாணவியின் உடலில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயம் விழுந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
காதல் விவகாரம் தொடர்பாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். யாராவது ஜெசியை ஒருதலையாககாதலித்திருக்க வேண்டும். காதலை ஏற்க மறுத்ததால் அவரை தாக்கியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications