உளவு பார்த்து சிக்கிய டிஐஜி: ஜெ. புகார்
சென்னை:உளவு பார்த்து சிக்கிய, மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதியின் தனிச் செயலாளர் ஷகீல் அகமது அக்தரை அவசர அவசரமாக தமிழகபிரிவுக்கு மாற்றியதன் பின்னணி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதியின் தனிச் செயலாளராக இருந்து வந்த தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி ஷகீல் அகமது அக்தர் குறித்தபயங்கர செய்தி வெளியாகியுள்ளது.
உள்துறை இணை அமைச்சர் என்ற வகையில் நாட்டின் எல்லைப் பாதுகாப்பு குறித்த கோப்புகள் ரகுபதியிடம் தான் வரும். அண்டை நாட்டுதீவிரவாதிகள் அதிக அளவில் ஊடுறுவி வருகின்றனர் என்ற செய்தி அதிக அளவில் வந்து கொண்டுள்ளன. அவர்களுக்கு பண உதவி, ஆயுத உதவிஆகியவை வெளிநாடுகளிலிருந்து தங்கு தடையின்றி கிடைக்கிறது.
இவற்றைக் கண்காணித்து நாட்டு மக்களைக் காக்க வேண்டிய பணி உள்துறை இணை அமைச்சருக்கு உள்ளது. அவரது தனிச் செயலாளராக தமிழகஐ.பி. எஸ். அதிகாரி ஷகீல் அகமது அக்தரை வைத்திருந்தார் ரகுபதி.
இந்த நிலையின் நாட்டின் பாதுகாப்பு குறித்த ரகசியத் தகவல்களை சிலர் வெளிநாட்டுக்கு பரிமாற்றம் செய்திருப்பதையும், அதில் ஷகீல் அகமதுக்குதொடர்பு இருப்பதையும் உளவு அமைப்பான ரா கண்டுபிடித்துள்ளது.
சில வெளிநாட்டுத் தூதரகங்களுடனும் ஷகீல் அகமது தொடர்பு வைத்துள்ளார். அவர்களுடன் ரகசிய செல் போன் தொடர்பையும் வைத்திருக்கிறார்என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து மேல் விசாரைணக்கு உட்படுத்தாமல், அவசர அவசரமாக அவரை தமிழக பிரிவுக்கு மாற்றியுள்ளனர். காஞ்சிபுரம் சரகடிஐஜியாக நியமித்துள்ளனர்.
1991ம் ஆண்டு தீவிரவாதிகளுக்கு உதவியதாக கூறித்தான் கருணாநிதியின் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில், அவரால் உள்துறைஇணை அமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்ட ரகுபதிக்கு, தனது அந்தரங்கச் செயலாளர் என்ன செய்கிறார் என்பது கூடவா தெரியாது?
ஷகீல் அகமதுவை ரகுபதியாக கேட்டுப் பெற்றாரா அல்லது கருணாநிதிதான் அனுப்பி வைத்தாரா என்பதற்கு கருணாநிதியும், ரகுபதியும் பதில்சொல்ல வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த வேகத்தில் ஷகீல் அகமது தமிழகபிரிவுக்கு மாற்றப்பட்டாரோ அதே வேகத்தில் அவரது பின்னணி குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications