பெரியாறு: கேரள தலைவர்களுடன் காரத் பேச்சு
சென்னை:முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்,கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்சீதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதியை எச்சூரி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பு சுமார்அரை மணி நேரம் நீடித்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவராகசென்னைக்கு வந்துள்ளேன்.
தமிழகத்தில் உள்ள சில முக்கிய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட இக்குழு சென்னை வந்துள்ளது. சென்னை,எண்ணூர் துறைமுகம், சென்னை விமான நிலையத்தில் நடந்து வரும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை இக்குழுபார்வையிடவுள்ளது.
முதல்வரை சந்தித்தபோது காவிரி, முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்கவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.இப்போது அந்தத் தீர்ப்பு வந்து விட்டது. இந்த விஷயத்தில் மறுபடியும் பேச்சு நடத்த வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் தலைவர்களுடன் பிரகாஷ் காரத் பேச்சு நடத்தி வருகிறார்.விரைவில் இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்றார் எச்சூரி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications